Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 3

Taha

(Ṭāʾ Hāʾ)

௨௧

قَالَ خُذْهَا وَلَا تَخَفْۗ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى ٢١

qāla
قَالَ
அவன் கூறினான்
khudh'hā
خُذْهَا
அதைப் பிடிப்பீராக!
walā takhaf
وَلَا تَخَفْۖ
பயப்படாதீர்!
sanuʿīduhā
سَنُعِيدُهَا
அதை திருப்புவோம்
sīratahā
سِيرَتَهَا
அதன் தன்மைக்கே
l-ūlā
ٱلْأُولَىٰ
முந்திய
(அப்போது இறைவன்) "நீங்கள் அதைப் பிடியுங்கள்; பயப்படாதீர்கள். உடனே அதனை முன் போல் (தடியாக) ஆக்கி விடுவேன். ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௧)
Tafseer
௨௨

وَاضْمُمْ يَدَكَ اِلٰى جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاۤءَ مِنْ غَيْرِ سُوْۤءٍ اٰيَةً اُخْرٰىۙ ٢٢

wa-uḍ'mum
وَٱضْمُمْ
இன்னும் சேர்ப்பீராக
yadaka
يَدَكَ
உமது கரத்தை
ilā janāḥika
إِلَىٰ جَنَاحِكَ
புஜத்தின் கீழ்
takhruj
تَخْرُجْ
தோன்றும்
bayḍāa
بَيْضَآءَ
வெண்மையாக
min ghayri sūin
مِنْ غَيْرِ سُوٓءٍ
நோயுமின்றி
āyatan
ءَايَةً
அத்தாட்சியாக
ukh'rā
أُخْرَىٰ
மற்றொரு
உங்களுடைய கையை உங்களது கக்கத்தில் சேர்த்து வையுங்கள். (அதை எடுக்கும்போது அது மிக்க ஒளியுடன் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இது) மற்றொரு அத்தாட்சியாகும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௨)
Tafseer
௨௩

لِنُرِيَكَ مِنْ اٰيٰتِنَا الْكُبْرٰى ۚ ٢٣

linuriyaka
لِنُرِيَكَ
உமக்கு நாம் காண்பிப்பதற்காக
min āyātinā
مِنْ ءَايَٰتِنَا
நமது அத்தாட்சிகளில்
l-kub'rā
ٱلْكُبْرَى
பெரிய
(இவ்வாறு இன்னும்) நம்முடைய பெரிய அத்தாட்சிகளை உங்களுக்கு நாம் காண்பிப்போம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௩)
Tafseer
௨௪

اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى ࣖ ٢٤

idh'hab
ٱذْهَبْ
நீர் செல்வீராக
ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ṭaghā
طَغَىٰ
வரம்பு மீறிவிட்டான்
நீங்கள் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மாறு செய்து கொண்டிருக்கிறான்" என்று கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௪)
Tafseer
௨௫

قَالَ رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ ۙ ٢٥

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
ish'raḥ lī
ٱشْرَحْ لِى
எனக்கு விரிவாக்கு
ṣadrī
صَدْرِى
என் நெஞ்சத்தை
அதற்கு "என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு; ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௫)
Tafseer
௨௬

وَيَسِّرْ لِيْٓ اَمْرِيْ ۙ ٢٦

wayassir
وَيَسِّرْ
இன்னும் இலகுவாக்கு
لِىٓ
எனக்கு
amrī
أَمْرِى
என் காரியத்தை
(நான் செய்ய வேண்டிய) காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை. ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௬)
Tafseer
௨௭

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِيْ ۙ ٢٧

wa-uḥ'lul
وَٱحْلُلْ
இன்னும் அவிழ்த்துவிடு
ʿuq'datan
عُقْدَةً
கொன்னலை
min lisānī
مِّن لِّسَانِى
என் நாவிலிருந்து
என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு; ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௭)
Tafseer
௨௮

يَفْقَهُوْا قَوْلِيْ ۖ ٢٨

yafqahū
يَفْقَهُوا۟
அவர்கள் புரிந்து கொள்வார்கள்
qawlī
قَوْلِى
என் பேச்சை
என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்ளும்படிச் செய். ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௮)
Tafseer
௨௯

وَاجْعَلْ لِّيْ وَزِيْرًا مِّنْ اَهْلِيْ ۙ ٢٩

wa-ij'ʿal
وَٱجْعَل
இன்னும் ஏற்படுத்து
لِّى
எனக்கு
wazīran
وَزِيرًا
ஓர் உதவியாளரை
min ahlī
مِّنْ أَهْلِى
என்குடும்பத்திலிருந்து
என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக்கி (மந்திரியாக்கி) வை; ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௯)
Tafseer
௩௦

هٰرُوْنَ اَخِى ۙ ٣٠

hārūna
هَٰرُونَ
ஹாரூனை
akhī
أَخِى
என் சகோதரர்
அவர் என்னுடைய சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௩௦)
Tafseer