Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 2

Taha

(Ṭāʾ Hāʾ)

௧௧

فَلَمَّآ اَتٰىهَا نُوْدِيَ يٰمُوْسٰٓى ۙ ١١

falammā atāhā
فَلَمَّآ أَتَىٰهَا
அவர் அதனிடம் வந்தபோது
nūdiya
نُودِىَ
அழைக்கப்பட்டார்
yāmūsā
يَٰمُوسَىٰٓ
மூஸாவே!
அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) "மூஸாவே!" என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது:) ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧)
Tafseer
௧௨

اِنِّيْٓ اَنَا۠ رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَۚ اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى ۗ ١٢

innī anā
إِنِّىٓ أَنَا۠
நிச்சயமாக நான்தான்
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
fa-ikh'laʿ
فَٱخْلَعْ
கழட்டுவீராக
naʿlayka
نَعْلَيْكَۖ
உமது செருப்புகளை
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
bil-wādi
بِٱلْوَادِ
பள்ளத்தாக்கில்
l-muqadasi
ٱلْمُقَدَّسِ
பரிசுத்தமான
ṭuwan
طُوًى
துவா
நிச்சயமாக நான்தான் உங்களது இறைவன். உங்களுடைய காலணிகள் இரண்டையும் கழற்றிவிடுங்கள். நிச்சயமாக நீங்கள் "துவா" என்னும் பரிசுத்த இடத்தில் இருக்கிறீர்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨)
Tafseer
௧௩

وَاَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوْحٰى ١٣

wa-anā
وَأَنَا
நான்
ikh'tartuka
ٱخْتَرْتُكَ
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்
fa-is'tamiʿ
فَٱسْتَمِعْ
ஆகவே செவிமடுப்பீராக
limā yūḥā
لِمَا يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுபவற்றை
"நான் உங்களை (என் தூதராகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆதலால், வஹீ மூலம் (உங்களுக்கு) அறிவிக்கப்படுபவைகளை நீங்கள் செவிசாயுங்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௩)
Tafseer
௧௪

اِنَّنِيْٓ اَنَا اللّٰهُ لَآ اِلٰهَ اِلَّآ اَنَا۠ فَاعْبُدْنِيْۙ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِيْ ١٤

innanī anā
إِنَّنِىٓ أَنَا
நிச்சயமாக நான்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّآ
தவிர
anā
أَنَا۠
என்னை
fa-uʿ'bud'nī
فَٱعْبُدْنِى
ஆகவே, என்னை வணங்குவீராக
wa-aqimi
وَأَقِمِ
இன்னும் நிலைநிறுத்துவீராக
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
lidhik'rī
لِذِكْرِىٓ
என் நினைவிற்காக
நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்." ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௪)
Tafseer
௧௫

اِنَّ السَّاعَةَ اٰتِيَةٌ اَكَادُ اُخْفِيْهَا لِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا تَسْعٰى ١٥

inna
إِنَّ
நிச்சயமாக
l-sāʿata
ٱلسَّاعَةَ
மறுமை
ātiyatun
ءَاتِيَةٌ
வரக்கூடியதாகும்
akādu ukh'fīhā
أَكَادُ أُخْفِيهَا
அதை நான் மறைத்தே வைத்திருப்பேன்
lituj'zā
لِتُجْزَىٰ
கூலி கொடுக்கப்படுவதற்காக
kullu
كُلُّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍۭ
ஆன்மாவும்
bimā tasʿā
بِمَا تَسْعَىٰ
அது செய்கின்றவற்றுக்கு
நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதனை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௫)
Tafseer
௧௬

فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوٰىهُ فَتَرْدٰى ١٦

falā yaṣuddannaka
فَلَا يَصُدَّنَّكَ
உம்மை திருப்பிவிட வேண்டாம்
ʿanhā
عَنْهَا
அதை விட்டு
man lā yu'minu
مَن لَّا يُؤْمِنُ
எவன் நம்பிக்கை கொள்ளவில்லை
bihā
بِهَا
அதை
wa-ittabaʿa
وَٱتَّبَعَ
பின்பற்றியவன்
hawāhu
هَوَىٰهُ
தனது மன இச்சையை
fatardā
فَتَرْدَىٰ
நீர் அழிந்து விடுவீர்
ஆகவே, அதனை ( மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உங்களைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௬)
Tafseer
௧௭

وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى ١٧

wamā
وَمَا
என்ன?
til'ka
تِلْكَ
அது
biyamīnika
بِيَمِينِكَ
உமது வலக்கையில்
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
"மூஸாவே! உங்களது வலது கையில் இருப்பது என்ன?" என்று கேட்டான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௭)
Tafseer
௧௮

قَالَ هِيَ عَصَايَۚ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَنَمِيْ وَلِيَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى ١٨

qāla
قَالَ
அவர் கூறினார்
hiya
هِىَ
அது
ʿaṣāya
عَصَاىَ
எனது கைத்தடி
atawakka-u
أَتَوَكَّؤُا۟
சாய்ந்து கொள்வேன்
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
wa-ahushu
وَأَهُشُّ
இன்னும் பறிப்பேன்
bihā
بِهَا
அதைக் கொண்டு
ʿalā ghanamī
عَلَىٰ غَنَمِى
என் ஆடுகளுக்கு
waliya
وَلِىَ
இன்னும் எனக்கு
fīhā
فِيهَا
அதில் உள்ளன
maāribu ukh'rā
مَـَٔارِبُ أُخْرَىٰ
மற்ற பல தேவைகள்
அதற்கவர் "இது என்னுடைய கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என்னுடைய ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன" என்று கூறினார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௮)
Tafseer
௧௯

قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى ١٩

qāla
قَالَ
அவன் கூறினான்
alqihā
أَلْقِهَا
அதை நீர் எறிவீராக
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
அதற்கு (இறைவன்) "மூஸாவே! நீங்கள் அதனை(த் தரையில்) எறியுங்கள்" எனக் கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௯)
Tafseer
௨௦

فَاَلْقٰىهَا فَاِذَا هِيَ حَيَّةٌ تَسْعٰى ٢٠

fa-alqāhā
فَأَلْقَىٰهَا
அதை அவர்எறிந்தார்
fa-idhā hiya
فَإِذَا هِىَ
உடனே/அது ஆகிவிட்டது
ḥayyatun tasʿā
حَيَّةٌ تَسْعَىٰ
ஓடுகின்றது/ஒரு பாம்பாக
அவர் அதனை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று. ([௨௦] ஸூரத்து தாஹா: ௨௦)
Tafseer