Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 14

Taha

(Ṭāʾ Hāʾ)

௧௩௧

وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖٓ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ەۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ ۗوَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى ١٣١

walā tamuddanna
وَلَا تَمُدَّنَّ
நீர் திருப்பாதீர்
ʿaynayka
عَيْنَيْكَ
உமது கண்களை
ilā mā mattaʿnā
إِلَىٰ مَا مَتَّعْنَا
எவற்றின் பக்கம் இன்பமளித்தோம்
bihi
بِهِۦٓ
அதன் மூலம்
azwājan
أَزْوَٰجًا
போன்றவர்கள்
min'hum
مِّنْهُمْ
இவர்களை
zahrata
زَهْرَةَ
அலங்காரமாக
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கையின்
linaftinahum
لِنَفْتِنَهُمْ
அவர்களை நாம் சோதிப்பதற்காக
fīhi
فِيهِۚ
அதில்
wariz'qu
وَرِزْقُ
அருட்கொடை
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
khayrun
خَيْرٌ
சிறந்தது
wa-abqā
وَأَبْقَىٰ
நிலையானது
(நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்து இருப்பவற்றின் பக்கம் நீங்கள் உங்களுடைய பார்வையைச் செலுத்தாதீர்கள். இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவைகளை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உங்கள் இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௩௧)
Tafseer
௧௩௨

وَأْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ عَلَيْهَاۗ لَا نَسْـَٔلُكَ رِزْقًاۗ نَحْنُ نَرْزُقُكَۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوٰى ١٣٢

wamur
وَأْمُرْ
ஏவுவீராக
ahlaka
أَهْلَكَ
உமது குடும்பத்திற்கு
bil-ṣalati
بِٱلصَّلَوٰةِ
தொழுகையை
wa-iṣ'ṭabir
وَٱصْطَبِرْ
உறுதியாக இருப்பீராக
ʿalayhā
عَلَيْهَاۖ
அதன் மீது
lā nasaluka
لَا نَسْـَٔلُكَ
நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை
riz'qan
رِزْقًاۖ
உணவு எதையும்
naḥnu narzuquka
نَّحْنُ نَرْزُقُكَۗ
நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம்
wal-ʿāqibatu
وَٱلْعَٰقِبَةُ
நல்ல முடிவு
lilttaqwā
لِلتَّقْوَىٰ
இறையச்சத்திற்குத்தான்
(நபியே!) தொழுது வருமாறு நீங்கள் உங்கள் குடும்பத்தினரை ஏவுங்கள். நீங்களும் அதன் மீது உறுதியாக இருங்கள். (இதற்காக) நாம் உங்களிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. உங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை பரிசுத்த தன்மைக்குத்தான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௩௨)
Tafseer
௧௩௩

وَقَالُوْا لَوْلَا يَأْتِيْنَا بِاٰيَةٍ مِّنْ رَّبِّهٖۗ اَوَلَمْ تَأْتِهِمْ بَيِّنَةُ مَا فِى الصُّحُفِ الْاُولٰى ١٣٣

waqālū
وَقَالُوا۟
இவர்கள் கூறினார்கள்
lawlā yatīnā
لَوْلَا يَأْتِينَا
நம்மிடம் கொண்டு வரமாட்டாரா
biāyatin
بِـَٔايَةٍ
ஓர் அத்தாட்சியை
min rabbihi
مِّن رَّبِّهِۦٓۚ
தன் இறைவனிடமிருந்து
awalam tatihim
أَوَلَمْ تَأْتِهِم
அவர்களிடம் வரவில்லையா
bayyinatu
بَيِّنَةُ
தெளிவான சான்று
mā fī l-ṣuḥufi
مَا فِى ٱلصُّحُفِ
வேதங்களில் உள்ள
l-ūlā
ٱلْأُولَىٰ
முந்திய
("இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான முன்னறிக்கை அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது.) ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௩௩)
Tafseer
௧௩௪

وَلَوْ اَنَّآ اَهْلَكْنٰهُمْ بِعَذَابٍ مِّنْ قَبْلِهٖ لَقَالُوْا رَبَّنَا لَوْلَآ اَرْسَلْتَ اِلَيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ مِنْ قَبْلِ اَنْ نَّذِلَّ وَنَخْزٰى ١٣٤

walaw annā ahlaknāhum
وَلَوْ أَنَّآ أَهْلَكْنَٰهُم
இவர்களை நாம் அழித்திருந்தால்
biʿadhābin
بِعَذَابٍ
ஒரு வேதனையைக் கொண்டு
min qablihi
مِّن قَبْلِهِۦ
இதற்கு முன்னரே
laqālū
لَقَالُوا۟
கூறுவார்கள்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
lawlā arsalta
لَوْلَآ أَرْسَلْتَ
நீ அனுப்பி இருக்கக்கூடாதா?
ilaynā
إِلَيْنَا
எங்களுக்கு
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
fanattabiʿa
فَنَتَّبِعَ
பின்பற்றி இருப்போமே
āyātika
ءَايَٰتِكَ
உனது வசனங்களை
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an nadhilla
أَن نَّذِلَّ
இழிவடைவதற்கும்
wanakhzā
وَنَخْزَىٰ
கேவலப்படுவதற்கும்
(நம்முடைய தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன்னுடைய வசனங்களைப் பின்பற்றியிருப்போம்" என்று கூறுவார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௩௪)
Tafseer
௧௩௫

قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوْاۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ اَصْحٰبُ الصِّرَاطِ السَّوِيِّ وَمَنِ اهْتَدٰى ࣖ ۔ ١٣٥

qul
قُلْ
கூறுவீராக
kullun
كُلٌّ
ஒவ்வொருவரும்
mutarabbiṣun
مُّتَرَبِّصٌ
எதிர்பார்ப்பவர்களே
fatarabbaṣū
فَتَرَبَّصُوا۟ۖ
ஆகவே எதிர்பாருங்கள்
fasataʿlamūna
فَسَتَعْلَمُونَ
நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
man
مَنْ
யார்
aṣḥābu l-ṣirāṭi
أَصْحَٰبُ ٱلصِّرَٰطِ
பாதையுடையவர்கள்
l-sawiyi
ٱلسَّوِىِّ
நேரான
wamani
وَمَنِ
யார்
ih'tadā
ٱهْتَدَىٰ
நேர்வழி பெற்றவர்
(நபியே! நீங்கள்) கூறுங்கள்: "ஒவ்வொருவரும் (தங்களுக்கு வர வேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள். நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்துவிட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௩௫)
Tafseer