Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 13

Taha

(Ṭāʾ Hāʾ)

௧௨௧

فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِۚ وَعَصٰٓى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى ۖ ١٢١

fa-akalā
فَأَكَلَا
ஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர்
min'hā
مِنْهَا
அதிலிருந்து
fabadat
فَبَدَتْ
ஆகவே தெரியவந்தன
lahumā
لَهُمَا
அவ்விருவருக்கும்
sawātuhumā
سَوْءَٰتُهُمَا
அவ்விருவரின் மறைவிடங்கள்
waṭafiqā
وَطَفِقَا
இன்னும் முற்பட்டனர்
yakhṣifāni
يَخْصِفَانِ
அவ்விருவரும் கட்டிக்கொள்வதற்கு
ʿalayhimā
عَلَيْهِمَا
தங்கள் இருவர் மீது
min waraqi
مِن وَرَقِ
இலைகளை
l-janati
ٱلْجَنَّةِۚ
சொர்க்கத்தின்
waʿaṣā
وَعَصَىٰٓ
இன்னும் மாறுசெய்தார்
ādamu
ءَادَمُ
ஆதம்
rabbahu
رَبَّهُۥ
தன் இறைவனுக்கு
faghawā
فَغَوَىٰ
ஆகவே வழி தவறி விட்டார்
ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதனைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானமும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறு செய்து வழி தவறிவிட்டார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௧)
Tafseer
௧௨௨

ثُمَّ اجْتَبٰىهُ رَبُّهٗ فَتَابَ عَلَيْهِ وَهَدٰى ١٢٢

thumma
ثُمَّ
பிறகு
ij'tabāhu
ٱجْتَبَٰهُ
அவரை தேர்ந்தெடுத்தான்
rabbuhu
رَبُّهُۥ
அவருடையஇறைவன்
fatāba
فَتَابَ
மன்னித்தான்
ʿalayhi
عَلَيْهِ
அவரை
wahadā
وَهَدَىٰ
நேர்வழி காட்டினான்
பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௨)
Tafseer
௧௨௩

قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًاۢ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚفَاِمَّا يَأْتِيَنَّكُمْ مِّنِّيْ هُدًى ەۙ فَمَنِ اتَّبَعَ هُدٰيَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى ١٢٣

qāla
قَالَ
கூறினான்
ih'biṭā
ٱهْبِطَا
நீங்கள் இறங்குங்கள்
min'hā
مِنْهَا
இதிலிருந்து
jamīʿan
جَمِيعًۢاۖ
அனைவரும்
baʿḍukum
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
சிலருக்கு
ʿaduwwun
عَدُوٌّۖ
எதிரி
fa-immā yatiyannakum
فَإِمَّا يَأْتِيَنَّكُم
உங்களுக்கு வந்தால்
minnī
مِّنِّى
என்னிடமிருந்து
hudan
هُدًى
நேர்வழியை
famani
فَمَنِ
எவர்
ittabaʿa
ٱتَّبَعَ
பின்பற்றுவாரோ
hudāya
هُدَاىَ
எனது நேர்வழியை
falā yaḍillu
فَلَا يَضِلُّ
வழிதவற மாட்டார்
walā yashqā
وَلَا يَشْقَىٰ
இன்னும் சிரமப்பட மாட்டார்
அன்றி "நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக ஏற்பட்டு விடுவார்கள். அச்சமயம் நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௩)
Tafseer
௧௨௪

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِيْ فَاِنَّ لَهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى ١٢٤

waman
وَمَنْ
எவன்
aʿraḍa
أَعْرَضَ
புறக்கணிப்பானோ
ʿan dhik'rī
عَن ذِكْرِى
என் அறிவுரையை விட்டு
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
lahu
لَهُۥ
அவனுக்கு
maʿīshatan
مَعِيشَةً
வாழ்க்கைதான்
ḍankan
ضَنكًا
நெருக்கடியான
wanaḥshuruhu
وَنَحْشُرُهُۥ
இன்னும் அவனை நாம் எழுப்புவோம்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமையில்
aʿmā
أَعْمَىٰ
குருடனாக
எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக் கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடி யானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௪)
Tafseer
௧௨௫

قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِيْٓ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا ١٢٥

qāla
قَالَ
அவன் கூறுவான்
rabbi
رَبِّ
என் இறைவா
lima ḥashartanī
لِمَ حَشَرْتَنِىٓ
ஏன் என்னை எழுப்பினாய்
aʿmā
أَعْمَىٰ
குருடனாக
waqad kuntu
وَقَدْ كُنتُ
நான் இருந்தேனே
baṣīran
بَصِيرًا
பார்வை உள்ளவனாக
(அச்சமயம்) அவன் "என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேனே!" என்று கேட்பான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௫)
Tafseer
௧௨௬

قَالَ كَذٰلِكَ اَتَتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَاۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى ١٢٦

qāla
قَالَ
அவன் கூறுவான்
kadhālika
كَذَٰلِكَ
அவ்வாறுதான்
atatka
أَتَتْكَ
உன்னிடம் வந்தன
āyātunā
ءَايَٰتُنَا
எனது வசனங்கள்
fanasītahā
فَنَسِيتَهَاۖ
ஆனால், நீ அவற்றை மறந்தாய்
wakadhālika l-yawma
وَكَذَٰلِكَ ٱلْيَوْمَ
அவ்வாறே/இன்று
tunsā
تُنسَىٰ
நீ மறக்கப்படுவாய்
அதற்கு (இறைவன்) "இவ்வாறே (குருடனைப் போன்ற உன் காரியங்கள் இருந்தன) நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்" என்று கூறுவான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௬)
Tafseer
௧௨௭

وَكَذٰلِكَ نَجْزِيْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْۢ بِاٰيٰتِ رَبِّهٖۗ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى ١٢٧

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
man asrafa
مَنْ أَسْرَفَ
எவர்/வரம்பு மீறினார்
walam yu'min
وَلَمْ يُؤْمِنۢ
இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
rabbihi
رَبِّهِۦۚ
தன் இறைவனின்
walaʿadhābu
وَلَعَذَابُ
தண்டனை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
ashaddu
أَشَدُّ
மிகக் கடுமையானது
wa-abqā
وَأَبْقَىٰٓ
இன்னும் நிரந்தரமானது
எவன் வரம்பு மீறி தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௭)
Tafseer
௧௨௮

اَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِيْ مَسٰكِنِهِمْۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّاُولِى النُّهٰى ࣖ ١٢٨

afalam yahdi
أَفَلَمْ يَهْدِ
தெளிவுபடுத்தவில்லையா
lahum
لَهُمْ
அவர்களுக்கு
kam
كَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்தது
qablahum
قَبْلَهُم
இவர்களுக்கு முன்னர்
mina l-qurūni
مِّنَ ٱلْقُرُونِ
தலைமுறையினர்களை
yamshūna
يَمْشُونَ
செல்கிறார்கள்
fī masākinihim
فِى مَسَٰكِنِهِمْۗ
அவர்களின் இருப்பிடங்களில்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
li-ulī l-nuhā
لِّأُو۟لِى ٱلنُّهَىٰ
அறிவுடையவர்களுக்கு
இவர்களுக்கு முன் இருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்துபோன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௮)
Tafseer
௧௨௯

وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَكَانَ لِزَامًا وَّاَجَلٌ مُّسَمًّى ۗ ١٢٩

walawlā kalimatun
وَلَوْلَا كَلِمَةٌ
ஒரு வாக்கு(ம்) இருக்கவில்லையெனில்
sabaqat
سَبَقَتْ
முந்தி
min rabbika
مِن رَّبِّكَ
உமது இறைவனிடம்
lakāna lizāman
لَكَانَ لِزَامًا
கண்டிப்பாக மரணம் ஏற்பட்டே இருக்கும்
wa-ajalun
وَأَجَلٌ
தவணையும்
musamman
مُّسَمًّى
ஒரு குறிப்பிட்ட
(நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உங்கள் இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிராவிடில் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௯)
Tafseer
௧௩௦

فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚوَمِنْ اٰنَاۤئِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى ١٣٠

fa-iṣ'bir
فَٱصْبِرْ
நீர் பொறுத்துக் கொள்வீராக
ʿalā mā yaqūlūna
عَلَىٰ مَا يَقُولُونَ
அவர்கள் கூறுவதை
wasabbiḥ
وَسَبِّحْ
இன்னும் தொழுவீராக
biḥamdi
بِحَمْدِ
புகழ்ந்து
rabbika
رَبِّكَ
உமது இறைவனை
qabla
قَبْلَ
முன்னரும்
ṭulūʿi
طُلُوعِ
உதிக்கும்
l-shamsi
ٱلشَّمْسِ
சூரியன்
waqabla
وَقَبْلَ
முன்னரும்
ghurūbihā
غُرُوبِهَاۖ
அது மறையும்
wamin ānāi
وَمِنْ ءَانَآئِ
நேரங்களிலும்
al-layli
ٱلَّيْلِ
இரவின்
fasabbiḥ
فَسَبِّحْ
இன்னும் தொழுவீராக
wa-aṭrāfa
وَأَطْرَافَ
ஓரங்களிலும்
l-nahāri
ٱلنَّهَارِ
பகலின்
laʿallaka tarḍā
لَعَلَّكَ تَرْضَىٰ
நீர் திருப்தி பெறுவீர்
ஆகவே, அவர்கள் (உங்களைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீங்கள் பொறுமையுடன் சகித்திருங்கள். சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருங்கள். இவ்வாறே பகலின் இருமுனைகளிலும் (இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டு இருங்கள். இதனால்) நீங்கள் திருப்தி அடையலாம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௩௦)
Tafseer