Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 12

Taha

(Ṭāʾ Hāʾ)

௧௧௧

۞ وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَيِّ الْقَيُّوْمِۗ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا ١١١

waʿanati
وَعَنَتِ
பணிந்து விட்டன
l-wujūhu
ٱلْوُجُوهُ
முகங்கள்
lil'ḥayyi
لِلْحَىِّ
என்றும் உயிருள்ளவன்
l-qayūmi
ٱلْقَيُّومِۖ
என்றும் நிலையானவன்
waqad
وَقَدْ
திட்டமாக
khāba
خَابَ
நஷ்டமடைந்தான்
man ḥamala
مَنْ حَمَلَ
சுமந்தவன்
ẓul'man
ظُلْمًا
அநியாயத்தை
(அந்நாளில்) நிரந்தரமானவனும் நிலையானவனுமாகிய (இறை)வன் முன் அனைவருடைய தலைகளும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்துகொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௧)
Tafseer
௧௧௨

وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا ١١٢

waman
وَمَن
யார்
yaʿmal
يَعْمَلْ
செய்வாரோ
mina l-ṣāliḥāti
مِنَ ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
wahuwa
وَهُوَ
அவரோ இருக்க
mu'minun
مُؤْمِنٌ
நம்பிக்கையாளராக
falā yakhāfu
فَلَا يَخَافُ
பயப்பட மாட்டார்
ẓul'man
ظُلْمًا
அநியாயத்தை
walā haḍman
وَلَا هَضْمًا
இன்னும் நன்மைகள் குறைக்கப்படுவதை
எவர் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர், (தன்னுடைய நற்கூலி) அழிந்து விடுமென்றோ குறைந்து விடுமென்றோ பயப்படமாட்டார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௨)
Tafseer
௧௧௩

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا وَّصَرَّفْنَا فِيْهِ مِنَ الْوَعِيْدِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ اَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا ١١٣

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
qur'ānan
قُرْءَانًا
குர்ஆனாக
ʿarabiyyan
عَرَبِيًّا
அரபி மொழியிலான
waṣarrafnā fīhi
وَصَرَّفْنَا فِيهِ
நாம் விவரித்து இருக்கிறோம்/அதில்
mina l-waʿīdi
مِنَ ٱلْوَعِيدِ
எச்சரிக்கையை பலவாறாக
laʿallahum yattaqūna
لَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக
aw
أَوْ
அல்லது
yuḥ'dithu
يُحْدِثُ
அது ஏற்படுத்துவதற்காக
lahum
لَهُمْ
அவர்களுக்கு
dhik'ran
ذِكْرًا
ஓர் அறிவுரையை
இவ்வாறே இந்தக் குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். அவர்களுக்கு நல்லுணர்ச்சி ஏற்பட்டு அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக்கொள்ளும் பொருட்டு இதில் நாம் (நம்முடைய) வேதனையைப் பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௩)
Tafseer
௧௧௪

فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَقُّۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ ۖوَقُلْ رَّبِّ زِدْنِيْ عِلْمًا ١١٤

fataʿālā
فَتَعَٰلَى
மிக உயர்ந்தவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-maliku
ٱلْمَلِكُ
அரசனாகிய
l-ḥaqu
ٱلْحَقُّۗ
உண்மையாளனாகிய
walā taʿjal
وَلَا تَعْجَلْ
அவசரப்படாதீர்
bil-qur'āni
بِٱلْقُرْءَانِ
குர்ஆனில்
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an yuq'ḍā
أَن يُقْضَىٰٓ
முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு
ilayka
إِلَيْكَ
உமக்கு
waḥyuhu
وَحْيُهُۥۖ
அதனுடைய வஹீ
waqul
وَقُل
இன்னும் கூறுவீராக
rabbi
رَّبِّ
என் இறைவா
zid'nī
زِدْنِى
எனக்குஅதிகப்படுத்து
ʿil'man
عِلْمًا
ஞானத்தை
உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக்க உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உங்களுக்கு வஹீ அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதனை ஓத) நீங்கள் அவசரப்படாதீர்கள். எனினும் "என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௪)
Tafseer
௧௧௫

وَلَقَدْ عَهِدْنَآ اِلٰٓى اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا ࣖ ١١٥

walaqad ʿahid'nā
وَلَقَدْ عَهِدْنَآ
திட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம்
ilā ādama
إِلَىٰٓ ءَادَمَ
ஆதமுக்கு
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
fanasiya
فَنَسِىَ
மறந்து விட்டார்
walam najid
وَلَمْ نَجِدْ
நாம் காணவில்லை
lahu
لَهُۥ
அவரிடம்
ʿazman
عَزْمًا
உறுதியை
இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதனை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக) அதற்கு மாறு செய்யும் எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை. ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௫)
Tafseer
௧௧௬

وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَ اَبٰى ۗ ١١٦

wa-idh
وَإِذْ
சமயத்தை
qul'nā
قُلْنَا
நாம் கூறிய
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
us'judū
ٱسْجُدُوا۟
நீங்கள் சிரம் தாழ்த்துங்கள்
liādama
لِءَادَمَ
ஆதமுக்கு
fasajadū
فَسَجَدُوٓا۟
அவர்கள் சிரம் தாழ்த்தினர்
illā ib'līsa
إِلَّآ إِبْلِيسَ
இப்லீஸைத் தவிர
abā
أَبَىٰ
மறுத்து விட்டான்
மலக்குகளை நோக்கி "நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௬)
Tafseer
௧௧௭

فَقُلْنَا يٰٓاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقٰى ١١٧

faqul'nā
فَقُلْنَا
ஆகவே நாம் கூறினோம்
yāādamu
يَٰٓـَٔادَمُ
ஆதமே
inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இவன்
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
laka
لَّكَ
உமக்கு
walizawjika
وَلِزَوْجِكَ
இன்னும் உமது மனைவிக்கு
falā yukh'rijannakumā
فَلَا يُخْرِجَنَّكُمَا
ஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம்
mina l-janati
مِنَ ٱلْجَنَّةِ
சொர்க்கத்திலிருந்து
fatashqā
فَتَشْقَىٰٓ
நீர்சிரமப்பட்டுவிடுவீர்
(ஆதலால், நாம் ஆதமை நோக்கி) "ஆதமே! நிச்சயமாக இவன் உங்களுக்கும் உங்களுடைய மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப் படுத்திவிடாது நீங்கள் (எச்சரிக்கையாக) இருங்கள். இன்றேல் நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள்" என்று கூறினோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௭)
Tafseer
௧௧௮

اِنَّ لَكَ اَلَّا تَجُوْعَ فِيْهَا وَلَا تَعْرٰى ۙ ١١٨

inna
إِنَّ
நிச்சயமாக
laka
لَكَ
உமக்கு
allā tajūʿa
أَلَّا تَجُوعَ
நீர் பசித்திருக்காத
fīhā
فِيهَا
அதில்
walā taʿrā
وَلَا تَعْرَىٰ
இன்னும் ஆடையற்றிருக்காத
"நிச்சயமாக நீங்கள் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௮)
Tafseer
௧௧௯

وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِيْهَا وَلَا تَضْحٰى ١١٩

wa-annaka
وَأَنَّكَ
இன்னும் நிச்சயமாக நீர்
lā taẓma-u fīhā
لَا تَظْمَؤُا۟ فِيهَا
அதில்தர்கிக்கமாட்டீர்
walā taḍḥā
وَلَا تَضْحَىٰ
இன்னும் வெட்பத்தை உணர மாட்டீர்
நிச்சயமாக நீங்கள் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்கள்" என்று கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௯)
Tafseer
௧௨௦

فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰٓاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى ١٢٠

fawaswasa
فَوَسْوَسَ
ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான்
ilayhi
إِلَيْهِ
அவருக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
qāla
قَالَ
கூறினான்
yāādamu
يَٰٓـَٔادَمُ
ஆதமே
hal adulluka
هَلْ أَدُلُّكَ
நான் உமக்கு அறிவிக்கவா?
ʿalā shajarati
عَلَىٰ شَجَرَةِ
மரத்தையும்
l-khul'di
ٱلْخُلْدِ
நிரந்தரத்தின்
wamul'kin
وَمُلْكٍ
ஆட்சியையும்
lā yablā
لَّا يَبْلَىٰ
அழியாத
எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி "ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௨௦)
Tafseer