Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 11

Taha

(Ṭāʾ Hāʾ)

௧௦௧

خٰلِدِيْنَ فِيْهِ ۗوَسَاۤءَ لَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ حِمْلًاۙ ١٠١

khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்
fīhi
فِيهِۖ
அதில்
wasāa
وَسَآءَ
மிகக் கெட்டது
lahum
لَهُمْ
அவர்களுக்கு
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
ḥim'lan
حِمْلًا
சுமையால்
அதில் அவன் எந்நாளும் (அதனைச் சுமந்து கொண்டே) இருப்பான். மறுமை நாளில் அவர்கள் சுமக்கும் இச்சுமை மிகக் கெட்டது. ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௧)
Tafseer
௧௦௨

يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ وَنَحْشُرُ الْمُجْرِمِيْنَ يَوْمَىِٕذٍ زُرْقًا ۖ ١٠٢

yawma
يَوْمَ
நாளில்
yunfakhu
يُنفَخُ
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِۚ
சூரில்
wanaḥshuru
وَنَحْشُرُ
நாம் எழுப்புவோம்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
பாவிகளை
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
zur'qan
زُرْقًا
கண்கள் நீலமானவர்களாக
எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் (பயத்தினால்) அவர்களுடைய கண்கள் நீலம் பூத்திருக்கும். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௨)
Tafseer
௧௦௩

يَّتَخَافَتُوْنَ بَيْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا ١٠٣

yatakhāfatūna
يَتَخَٰفَتُونَ
அவர்கள் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள்
baynahum
بَيْنَهُمْ
தங்களுக்கு மத்தியில்
in labith'tum
إِن لَّبِثْتُمْ
நீங்கள் தங்கவில்லை
illā
إِلَّا
தவிர
ʿashran
عَشْرًا
பத்து நாட்களே
அவர்கள் தங்களுக்குள் மெதுவாக(ப் பேசி) "நீங்கள் ஒரு பத்து (நாள்களு)க்கு அதிகமாக (உலகத்தில்) தங்கவில்லை" (என்று கூறுவார்கள்). ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௩)
Tafseer
௧௦௪

نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ اِذْ يَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِيْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا يَوْمًا ࣖ ١٠٤

naḥnu
نَّحْنُ
நாம்
aʿlamu
أَعْلَمُ
நன்கறிந்தவர்கள்
bimā yaqūlūna
بِمَا يَقُولُونَ
அவர்கள் பேசுவதை
idh yaqūlu
إِذْ يَقُولُ
கூறும் போது
amthaluhum
أَمْثَلُهُمْ
முழுமையானவர்/அவர்களில்
ṭarīqatan
طَرِيقَةً
அறிவால்
in labith'tum
إِن لَّبِثْتُمْ
நீங்கள் தங்கவில்லை
illā
إِلَّا
தவிர
yawman
يَوْمًا
ஒரு நாளே
அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளோன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) "ஒரு நாளேயன்றி நீங்கள் தங்கவில்லை" என்று கூறுவான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௪)
Tafseer
௧௦௫

وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّيْ نَسْفًا ۙ ١٠٥

wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-jibāli
عَنِ ٱلْجِبَالِ
மலைகளைப் பற்றி
faqul
فَقُلْ
நீர் கூறுவீராக
yansifuhā
يَنسِفُهَا
அவற்றை தூளாக ஆக்கி விடுவான்
rabbī
رَبِّى
என் இறைவன்
nasfan
نَسْفًا
தூள்
(நபியே!) உங்களிடம் அவர்கள் மலைகளைப் பற்றி (அதன் கதி உலக முடிவின்போது என்னவாகும் என)க் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவன் அவைகளைத் தூள் தூளாக்கி(ப் பரப்பி) விடுவான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௫)
Tafseer
௧௦௬

فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۙ ١٠٦

fayadharuhā
فَيَذَرُهَا
இன்னும் அவற்றை விட்டுவிடுவான்
qāʿan
قَاعًا
சமமான
ṣafṣafan
صَفْصَفًا
பூமியாக
பூமியை சமமான வெட்டவெளியாக்கி விடுவான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௬)
Tafseer
௧௦௭

لَّا تَرٰى فِيْهَا عِوَجًا وَّلَآ اَمْتًا ۗ ١٠٧

lā tarā
لَّا تَرَىٰ
நீர் காணமாட்டீர்
fīhā
فِيهَا
அவற்றில்
ʿiwajan
عِوَجًا
கோணலை
walā amtan
وَلَآ أَمْتًا
இன்னும் வளைவை
அதில் ஒரு சிறிதும் மேடு பள்ளத்தை நீங்கள் காணமாட்டீர்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௭)
Tafseer
௧௦௮

يَوْمَىِٕذٍ يَّتَّبِعُوْنَ الدَّاعِيَ لَا عِوَجَ لَهٗ ۚوَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا ١٠٨

yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
yattabiʿūna
يَتَّبِعُونَ
பின் தொடர்வார்கள்
l-dāʿiya
ٱلدَّاعِىَ
அழைப்பாளரை
lā ʿiwaja
لَا عِوَجَ
திரும்ப முடியாது
lahu
لَهُۥۖ
அவரை விட்டு
wakhashaʿati
وَخَشَعَتِ
இன்னும் அமைதியாகிவிடும்
l-aṣwātu
ٱلْأَصْوَاتُ
சப்தங்கள் எல்லாம்
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு முன்
falā tasmaʿu
فَلَا تَسْمَعُ
செவிமடுக்க மாட்டீர்
illā
إِلَّا
தவிர
hamsan
هَمْسًا
மென்மையான சப்தத்தைத்
அந்நாளில் (அனைவரும் எக்காள மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்கமாட்டீர்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௮)
Tafseer
௧௦௯

يَوْمَىِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَرَضِيَ لَهٗ قَوْلًا ١٠٩

yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lā tanfaʿu
لَّا تَنفَعُ
பலனளிக்காது
l-shafāʿatu
ٱلشَّفَٰعَةُ
பரிந்துரை
illā
إِلَّا
தவிர
man
مَنْ
எவர்
adhina
أَذِنَ
அனுமதித்தான்
lahu
لَهُ
எவருக்கு
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
waraḍiya
وَرَضِىَ
இன்னும் அவன் விரும்பினான்
lahu
لَهُۥ
அவருடைய
qawlan
قَوْلًا
பேச்சை
அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது. ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௯)
Tafseer
௧௧௦

يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِهٖ عِلْمًا ١١٠

yaʿlamu
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
mā bayna
مَا بَيْنَ
உள்ளதையும்
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்
wamā khalfahum
وَمَا خَلْفَهُمْ
இன்னும் அவர்களுக்குப் பின்
walā yuḥīṭūna
وَلَا يُحِيطُونَ
அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள்
bihi
بِهِۦ
அவனை
ʿil'man
عِلْمًا
அறிவால்
அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௧௦)
Tafseer