Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯௭

Qur'an Surah Maryam Verse 97

ஸூரத்து மர்யம் [௧௯]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِيْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا (مريم : ١٩)

fa-innamā yassarnāhu
فَإِنَّمَا يَسَّرْنَٰهُ
So only We (have) made it easy
இதை நாம் இலகுவாக்கியதெல்லாம்
bilisānika
بِلِسَانِكَ
in your tongue
உமது நாவில்
litubashira
لِتُبَشِّرَ
that you may give glad tidings
நீர் நற்செய்தி கூறுவதற்காகவும்
bihi
بِهِ
with it
இதன் மூலம்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
(to) the righteous
இறையச்சமுள்ளவர்களுக்கு
watundhira
وَتُنذِرَ
and warn
நீர் எச்சரிப்பதற்காகவும்
bihi
بِهِۦ
with it
இதன் மூலம்
qawman
قَوْمًا
a people
மக்களை
luddan
لُّدًّا
hostile
தர்க்கிக்கின்ற(வர்கள்)

Transliteration:

Fa innamaa yassarnaahu bilisaanika litubashshira bihil muttaqeena wa tunzira bihee qawmal luddaa (QS. Maryam:97)

English Sahih International:

So, [O Muhammad], We have only made it [i.e., the Quran] easy in your tongue [i.e., the Arabic language] that you may give good tidings thereby to the righteous and warn thereby a hostile people. (QS. Maryam, Ayah ௯௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களுடைய மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் நீங்கள் இறை அச்சமுடையவர்களுக்கு நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே. (ஸூரத்து மர்யம், வசனம் ௯௭)

Jan Trust Foundation

(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை (இந்தக் குர்ஆனை) உமது நாவில் நாம் இலகுவாக்கியதெல்லாம் இறையச்சமுள்ளவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும் தர்க்கிக்கின்ற மக்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பதற்காகவும்தான்.