Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯

Qur'an Surah Maryam Verse 9

ஸூரத்து மர்யம் [௧௯]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ كَذٰلِكَۗ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـًٔا (مريم : ١٩)

qāla
قَالَ
He said
கூறினான்
kadhālika
كَذَٰلِكَ
"Thus
அப்படித்தான்
qāla
قَالَ
said
கூறினான்
rabbuka
رَبُّكَ
your Lord
உம் இறைவன்
huwa
هُوَ
It
அது
ʿalayya
عَلَىَّ
(is) easy for Me
எனக்கு
hayyinun
هَيِّنٌ
(is) easy for Me
மிக எளிது
waqad
وَقَدْ
and certainly
திட்டமாக
khalaqtuka
خَلَقْتُكَ
I (have) created you
நான் உன்னைப் படைத்திருக்கிறேன்
min qablu
مِن قَبْلُ
before before
இதற்கு முன்னர்
walam taku
وَلَمْ تَكُ
while not you were
நீர் இருக்காதபோது
shayan
شَيْـًٔا
anything.'
ஒரு பொருளாக

Transliteration:

Qaala kazaalika qaala Rabbuka huwa 'alaiya haiyinunw wa qad khalaqtuka min qablu wa lam taku shai'aa (QS. Maryam:9)

English Sahih International:

[An angel] said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, for I created you before, while you were nothing.'" (QS. Maryam, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அவ்வாறு செய்வது எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீங்கள் ஒன்றுமில்லாமலிருந்த சமயத்தில் நானே உங்களை படைத்தேன் என்று உங்களது இறைவனே கூறுகிறான்" என்றும் கூறினான். (ஸூரத்து மர்யம், வசனம் ௯)

Jan Trust Foundation

“(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்) கூறினான்: “அப்படித்தான். அது எனக்கு மிக எளிது. திட்டமாக இதற்கு முன்னர் நீர் ஒரு பொருளாக இருக்காதபோது நான் உன்னைப் படைத்திருக்கிறேன்”என்று உம் இறைவன் கூறினான்.