Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬௫

Qur'an Surah Maryam Verse 65

ஸூரத்து மர்யம் [௧௯]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖۗ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا ࣖ (مريم : ١٩)

rabbu
رَّبُّ
Lord
இறைவன்
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
(of) the heavens and the earth
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
and whatever (is) between both of them
இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவை
fa-uʿ'bud'hu
فَٱعْبُدْهُ
so worship Him
ஆகவே, அவனை வணங்குவீராக
wa-iṣ'ṭabir
وَٱصْطَبِرْ
and be constant
இன்னும் பொறுமையாக இருப்பீராக
liʿibādatihi
لِعِبَٰدَتِهِۦۚ
in His worship
அவனை வணங்குவதில்
hal taʿlamu
هَلْ تَعْلَمُ
Do you know
நீர் அறிவீரா
lahu
لَهُۥ
for Him
அவனுக்கு
samiyyan
سَمِيًّا
any similarity?
ஒப்பானவரை

Transliteration:

Rabbus samaawaati wal ardi wa maa bainahumaa fa'bud hu wastabir li'ibaadatih; hal ta'lamu lahoo samiyyaa (QS. Maryam:65)

English Sahih International:

Lord of the heavens and the earth and whatever is between them – so worship Him and have patience for His worship. Do you know of any similarity to Him?" (QS. Maryam, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவனும் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு வழிப்படுவதில் (உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும்) நீங்கள் சகித்துக் கொள்ளுங்கள். அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்து மர்யம், வசனம் ௬௫)

Jan Trust Foundation

“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன். ஆகவே, அவனை வணங்குவீராக! அவனை வணங்குவதில் பொறுமையாக இருப்பீராக! அவனுக்கு ஒப்பானவரை நீர் அறிவீரா!