Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௫௮

Qur'an Surah Maryam Verse 58

ஸூரத்து மர்யம் [௧௯]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍۖ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَاۤءِيْلَ ۖوَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَاۗ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩ (مريم : ١٩)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
இவர்கள்தான்
alladhīna
ٱلَّذِينَ
(were) the ones whom
எவர்கள்
anʿama
أَنْعَمَ
Allah bestowed favor
அருள் புரிந்திருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah bestowed favor
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِم
upon them
இவர்கள் மீது
mina l-nabiyīna
مِّنَ ٱلنَّبِيِّۦنَ
from (among) the Prophets
நபிமார்களில்
min dhurriyyati
مِن ذُرِّيَّةِ
of (the) offspring
சந்ததிகளில்
ādama
ءَادَمَ
(of) Adam
ஆதமுடைய
wamimman ḥamalnā
وَمِمَّنْ حَمَلْنَا
and of those We carried
இன்னும் நாம் ஏற்றியவர்களிலும்
maʿa nūḥin
مَعَ نُوحٍ
with Nuh
நூஹூடன்
wamin dhurriyyati
وَمِن ذُرِّيَّةِ
and of (the) offspring
சந்ததிகளிலும்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
இப்றாஹீம்
wa-is'rāīla
وَإِسْرَٰٓءِيلَ
and Israel
இன்னும் இஸ்ராயீல்
wamimman hadaynā
وَمِمَّنْ هَدَيْنَا
and of (those) whom We guided
நாம் நேர்வழிகாட்டி
wa-ij'tabaynā
وَٱجْتَبَيْنَآۚ
and We chose
தேர்ந்தெடுத்தவர்கள்
idhā tut'lā
إِذَا تُتْلَىٰ
When were recited
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
āyātu
ءَايَٰتُ
(the) Verses
வசனங்கள்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
(of) the Most Gracious
பேரருளாளனுடைய
kharrū
خَرُّوا۟
they fell
விழுந்து விடுவார்கள்
sujjadan
سُجَّدًا
prostrating
சிரம்பணிந்தவர்களாக
wabukiyyan
وَبُكِيًّا۩
and weeping
அழுதவர்களாக

Transliteration:

Ulaaa'ikal lazeena an'amal laahu 'alaihim minan Nabiyyeena min zurriyyati Aadama wa mimman hamalnaa ma'a Noohinw wa min zurriyyati Ibraaheema wa Israaa'eela wa mimman hadainaa wajta bainaaa; izaa tutlaa 'alaihim Aayaatur Rahmaani kharroo sujjadanw wa bukiyyaa (QS. Maryam:58)

English Sahih International:

Those were the ones upon whom Allah bestowed favor from among the prophets of the descendants of Adam and of those We carried [in the ship] with Noah, and of the descendants of Abraham and Israel [i.e., Jacob], and of those whom We guided and chose. When the verses of the Most Merciful were recited to them, they fell in prostration and weeping. (QS. Maryam, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஃகூப்) உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். அன்றி, நாம் தெரிந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள். (ஸூரத்து மர்யம், வசனம் ௫௮)

Jan Trust Foundation

இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள்தான் - இவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்திருக்கின்றான். (அவர்கள்) ஆதமுடைய சந்ததிகளில் உள்ள நபிமார்களில் உள்ளவர்கள். இன்னும் நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றியவர்களிலும் இப்றாஹீம் இன்னும் இஸ்ராயீலுடைய சந்ததிகளிலும் நாம் நேர்வழிகாட்டி தேர்ந்தெடுத்தவர்களிலும் உள்ளவர்கள் ஆவர். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக (பூமியில்) விழுந்து விடுவார்கள்.