Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௫௦

Qur'an Surah Maryam Verse 50

ஸூரத்து மர்யம் [௧௯]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا ࣖ (مريم : ١٩)

wawahabnā
وَوَهَبْنَا
And We bestowed
வழங்கினோம்
lahum
لَهُم
to them
அவர்களுக்கு
min raḥmatinā
مِّن رَّحْمَتِنَا
of Our Mercy
நமது அருளிலிருந்து
wajaʿalnā
وَجَعَلْنَا
and We made
இன்னும் ஏற்படுத்தினோம்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
lisāna
لِسَانَ
a truthful mention
புகழை
ṣid'qin
صِدْقٍ
a truthful mention
உண்மையான
ʿaliyyan
عَلِيًّا
high
உயர்வான

Transliteration:

Wa wahabnaa lahum mirrahmatinaa wa ja'alnaa lahum lisaana sidqin 'aliyyaa (QS. Maryam:50)

English Sahih International:

And We gave them of Our mercy, and We made for them a mention [i.e., reputation] of high honor. (QS. Maryam, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் "அலைஹிஸ் ஸலாம்" என்று எந்நாளும் துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.) (ஸூரத்து மர்யம், வசனம் ௫௦)

Jan Trust Foundation

மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு நமது அருளிலிருந்து வழங்கினோம். அவர்களுக்கு உயர்வான உண்மையான புகழை நாம் ஏற்படுத்தினோம்.