Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௫

Qur'an Surah Maryam Verse 5

ஸூரத்து மர்யம் [௧௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنِّيْ خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَّرَاۤءِيْ وَكَانَتِ امْرَاَتِيْ عَاقِرًا فَهَبْ لِيْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ (مريم : ١٩)

wa-innī
وَإِنِّى
And indeed, I
நிச்சயமாக நான்
khif'tu
خِفْتُ
[I] fear
பயப்படுகிறேன்
l-mawāliya
ٱلْمَوَٰلِىَ
the successors
உறவினர்களை
min warāī
مِن وَرَآءِى
after me after me
எனக்குப் பின்னால்
wakānati
وَكَانَتِ
and is
இன்னும் இருக்கிறாள்
im'ra-atī
ٱمْرَأَتِى
my wife
என் மனைவி
ʿāqiran
عَاقِرًا
barren
மலடியாக
fahab
فَهَبْ
So give
ஆகவே, தா!
لِى
[to] me
எனக்கு
min ladunka
مِن لَّدُنكَ
from Yourself
உன் புறத்திலிருந்து
waliyyan
وَلِيًّا
an heir
ஒரு வாரிசை

Transliteration:

Wa innee khiftul mawaa liya minw waraaa'ee wa kaana tim ra atee 'aairan fahab lee mil ladunka waliyyaa (QS. Maryam:5)

English Sahih International:

And indeed, I fear the successors after me, and my wife has been barren, so give me from Yourself an heir (QS. Maryam, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளனைப் பற்றிப் பயப்படுகிறேன். என்னுடைய மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கு பாதுகாவலனை ( ஒரு பிள்ளையை) வழங்குவாயாக! (ஸூரத்து மர்யம், வசனம் ௫)

Jan Trust Foundation

“இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நான் எனக்குப் பின்னால் உறவினர்களைப் பயப்படுகிறேன். என் மனைவி மலடியாக இருக்கிறாள். ஆகவே, எனக்கு உன் புறத்திலிருந்து ஒரு வாரிசைத் தா!