Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪௯

Qur'an Surah Maryam Verse 49

ஸூரத்து மர்யம் [௧௯]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙوَهَبْنَا لَهٗٓ اِسْحٰقَ وَيَعْقُوْبَۗ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا (مريم : ١٩)

falammā iʿ'tazalahum
فَلَمَّا ٱعْتَزَلَهُمْ
So when he left them
அவர் அவர்களை விட்டு விலகியபோது
wamā yaʿbudūna
وَمَا يَعْبُدُونَ
and what they worshipped
இன்னும் அவர்கள் வணங்கியதை
min dūni
مِن دُونِ
besides Allah besides Allah
அன்றி
l-lahi
ٱللَّهِ
besides Allah
அல்லாஹ்வை
wahabnā
وَهَبْنَا
[and] We bestowed
வழங்கினோம்
lahu
لَهُۥٓ
[to] him
அவருக்கு
is'ḥāqa
إِسْحَٰقَ
Ishaq
இஸ்ஹாக்கை
wayaʿqūba
وَيَعْقُوبَۖ
and Yaqub
இன்னும் யஃகூபை
wakullan
وَكُلًّا
and each (of them)
இன்னும் ஒவ்வொருவரையும்
jaʿalnā
جَعَلْنَا
We made
ஆக்கினோம்
nabiyyan
نَبِيًّا
a Prophet
நபியாக

Transliteration:

Falamma' tazalahum wa maa ya'budoona min doonil laahi wahabnaa lahoo is-haaqa wa ya'qoob, wa kullan ja'alnaa Nabiyyaa (QS. Maryam:49)

English Sahih International:

So when he had left them and those they worshipped other than Allah, We gave him Isaac and Jacob, and each [of them] We made a prophet. (QS. Maryam, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாத தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் அளித்தோம். அவர்கள் ஒவ்வொரு வரையும் நபியாகவும் ஆக்கினோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௪௯)

Jan Trust Foundation

(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியதையும் விட்டு விலகியபோது அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். (அவர்களில்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.