Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪௭

Qur'an Surah Maryam Verse 47

ஸூரத்து மர்யம் [௧௯]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ سَلٰمٌ عَلَيْكَۚ سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّيْۗ اِنَّهٗ كَانَ بِيْ حَفِيًّا (مريم : ١٩)

qāla
قَالَ
He said
கூறினார்
salāmun
سَلَٰمٌ
"Peace (be)
பாதுகாப்பு உண்டாகுக
ʿalayka
عَلَيْكَۖ
on you
உமக்கு
sa-astaghfiru
سَأَسْتَغْفِرُ
I will ask forgiveness
பாவமன்னிப்புக் கோருவேன்
laka
لَكَ
for you
உமக்காக
rabbī
رَبِّىٓۖ
(from) my Lord
என் இறைவனிடம்
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
بِى
to me
என் மீது
ḥafiyyan
حَفِيًّا
Ever Gracious
அருளுடையவனாக

Transliteration:

Qaala salaamun 'alaika sa astaghfiru laka Rabbeee innahoo kaana bee hafiyyaa (QS. Maryam:47)

English Sahih International:

[Abraham] said, "Peace [i.e., safety] will be upon you. I will ask forgiveness for you of my Lord. Indeed, He is ever gracious to me. (QS. Maryam, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

அதற்கு (இப்ராஹீம், இதோ நான் செல்கிறேன்) "உங்களுக்குச் ஈடேற்றம் உண்டாவதாக! பின்னர் நான் உங்களுக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்" என்று கூறினார். (ஸூரத்து மர்யம், வசனம் ௪௭)

Jan Trust Foundation

(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இப்றாஹீம்) கூறினார்: (என் புறத்திலிருந்து) உமக்கு பாதுகாப்பு உண்டாகுக! (இனி நீர் வெறுப்பதைக் கூறமாட்டேன்). உமக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் என் மீது அருளுடையவனாக இருக்கின்றான்.