Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪௬

Qur'an Surah Maryam Verse 46

ஸூரத்து மர்யம் [௧௯]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِيْ يٰٓاِبْرٰهِيْمُ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِيْ مَلِيًّا (مريم : ١٩)

qāla
قَالَ
He said
கூறினார்
arāghibun
أَرَاغِبٌ
"Do you hate
நீ வெறுக்கிறாயா?
anta
أَنتَ
"Do you hate
நீ
ʿan ālihatī
عَنْ ءَالِهَتِى
(from) my gods
என் தெய்வங்களை
yāib'rāhīmu
يَٰٓإِبْرَٰهِيمُۖ
O Ibrahim?
இப்றாஹீமே
la-in lam tantahi
لَئِن لَّمْ تَنتَهِ
Surely, if not you desist
நீர் விலகவில்லை என்றால்
la-arjumannaka
لَأَرْجُمَنَّكَۖ
surely, I will stone you
நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன்
wa-uh'jur'nī
وَٱهْجُرْنِى
so leave me
இன்னும் என்னை விட்டு விலகிவிடு
maliyyan
مَلِيًّا
(for) a prolonged time"
பாதுகாப்புப் பெற்றவராக

Transliteration:

Qaala araaghibun anta 'an aalihatee yaaa Ibraaheemu la 'il lam tantahi la arjumannaka wahjumee maliyyaa (QS. Maryam:46)

English Sahih International:

[His father] said, "Have you no desire for my gods, O Abraham? If you do not desist, I will surely stone you, so avoid me a prolonged time." (QS. Maryam, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக்கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீங்கள் எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்" என்று கூறினார். (ஸூரத்து மர்யம், வசனம் ௪௬)

Jan Trust Foundation

(அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக்க கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லாலெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(தந்தை) கூறினார்: இப்றாஹீமே! என் தெய்வங்களை நீ வெறுக்கிறாயா? நீ (இவற்றை குறை கூறுவதிலிருந்து) விலகவில்லையெனில் நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன். (நான் உன்னை ஏசுவதற்கு முன்னர்) பாதுகாப்புப் பெற்றவராக என்னை விட்டு விலகிவிடு!