குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪௨
Qur'an Surah Maryam Verse 42
ஸூரத்து மர்யம் [௧௯]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ قَالَ لِاَبِيْهِ يٰٓاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِيْ عَنْكَ شَيْـًٔا (مريم : ١٩)
- idh qāla
- إِذْ قَالَ
- When he said
- (அந்த) சமயத்தை கூறினார்
- li-abīhi
- لِأَبِيهِ
- to his father
- தனது தந்தைக்கு
- yāabati
- يَٰٓأَبَتِ
- "O my father!
- என் தந்தையே
- lima taʿbudu
- لِمَ تَعْبُدُ
- Why (do) you worship
- ஏன் வணங்குகிறீர்?
- mā lā yasmaʿu
- مَا لَا يَسْمَعُ
- that which not hears
- கேட்காதவற்றை
- walā yub'ṣiru
- وَلَا يُبْصِرُ
- and not sees
- இன்னும் பார்க்காதவற்றை
- walā yugh'nī
- وَلَا يُغْنِى
- and not benefits
- இன்னும் தடுக்காதவற்றை
- ʿanka
- عَنكَ
- [to] you
- உம்மை விட்டு
- shayan
- شَيْـًٔا
- (in) anything?
- எதையும்
Transliteration:
Iz qaala li abeehi yaaa abati lima ta'budu maa laa yasma'u wa laa yubsiru wa laa yughnee 'anka shai'aa(QS. Maryam:42)
English Sahih International:
[Mention] when he said to his father, "O my father, why do you worship that which does not hear and does not see and will not benefit you at all? (QS. Maryam, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
அவர் தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! யாதொன்றைப் பார்க்கவும், கேட்கவும், யாதொரு தீங்கை உங்களுக்குத் தடைசெய்யவும் சக்தியற்ற தெய்வங்களை நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்?" என்று கேட்டார். (ஸூரத்து மர்யம், வசனம் ௪௨)
Jan Trust Foundation
“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்த) சமயத்தை நினைவு கூருவீராக! அவர் தனது தந்தைக்கு கூறினார்: என் தந்தையே கேட்காதவற்றையும் பார்க்காதவற்றையும் உம்மை விட்டும் (தீமைகளில்) எதையும் தடுக்காதவற்றையும் ஏன் வணங்குகிறீர்?