குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௪
Qur'an Surah Maryam Verse 4
ஸூரத்து மர்யம் [௧௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ اِنِّيْ وَهَنَ الْعَظْمُ مِنِّيْ وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَاۤىِٕكَ رَبِّ شَقِيًّا (مريم : ١٩)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா!
- innī
- إِنِّى
- Indeed, [I]
- நிச்சயமாக நான்
- wahana
- وَهَنَ
- (have) weakened
- பலவீனமடைந்து விட்டது
- l-ʿaẓmu
- ٱلْعَظْمُ
- my bones
- எலும்பு
- minnī
- مِنِّى
- my bones
- என்னில்
- wa-ish'taʿala
- وَٱشْتَعَلَ
- and flared
- வெளுத்து விட்டது
- l-rasu
- ٱلرَّأْسُ
- (my) head
- தலை
- shayban
- شَيْبًا
- (with) white
- நரையால்
- walam akun
- وَلَمْ أَكُنۢ
- and not I have been
- நான் ஆகமாட்டேன்
- biduʿāika
- بِدُعَآئِكَ
- in (my) supplication (to) You
- உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில்
- rabbi
- رَبِّ
- my Lord
- என் இறைவா
- shaqiyyan
- شَقِيًّا
- unblessed
- துர்பாக்கியவனாக
Transliteration:
Qaala Rabbi innee wahanal'azmu minnee washta'alar raasu shaibanw wa lam akum bidu'aaa'ika Rabbi shaqiyyaa(QS. Maryam:4)
English Sahih International:
He said, "My Lord, indeed my bones have weakened, and my head has filled with white, and never have I been in my supplication to You, my Lord, unhappy [i.e., disappointed]. (QS. Maryam, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
"என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்துவிட்டது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கின்றாய்.) (ஸூரத்து மர்யம், வசனம் ௪)
Jan Trust Foundation
(அவர்) கூறினார்| “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எலும்பு என்னில் பலவீனமடைந்து விட்டது. தலை நரையால் வெளுத்து விட்டது. என் இறைவா! உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக (பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக) நான் ஆகமாட்டேன்.