Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௭

Qur'an Surah Maryam Verse 37

ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْۚ فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ يَوْمٍ عَظِيْمٍ (مريم : ١٩)

fa-ikh'talafa
فَٱخْتَلَفَ
But differed
ஆனால் தர்க்கித்தனர்
l-aḥzābu
ٱلْأَحْزَابُ
the sects
பல பிரிவினர்
min baynihim
مِنۢ بَيْنِهِمْۖ
from among them from among them
தங்களுக்கு மத்தியில்
fawaylun
فَوَيْلٌ
so woe
ஆகவே கேடுதான்
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
to those who disbelieve
நிராகரிப்பாளர்களுக்கு
min mashhadi
مِن مَّشْهَدِ
from (the) witnessing
அவர் காணும்போது
yawmin
يَوْمٍ
(of) a Day
நாளை
ʿaẓīmin
عَظِيمٍ
great
மகத்தான

Transliteration:

Fakhtalafal ahzaabu mim bainihim fawailul lillazeena kafaroo mim mashhadi Yawmin 'azeem (QS. Maryam:37)

English Sahih International:

Then the factions differed [concerning Jesus] from among them, so woe to those who disbelieved – from the scene of a tremendous Day. (QS. Maryam, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதனை, நிராகரிப்பவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் அவர்களுக்குக் கேடுதான். (ஸூரத்து மர்யம், வசனம் ௩௭)

Jan Trust Foundation

ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆனால், பல பிரிவினர் தங்களுக்கு மத்தியில் (இது பற்றி) தர்க்கித்தனர். ஆகவே, மகத்தான நாளை அவர் (ஈஸா) காணும்போது (அந்த) நிராகரிப்பாளர்களுக்குக் கேடுதான்.