குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௩௧
Qur'an Surah Maryam Verse 31
ஸூரத்து மர்யம் [௧௯]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّجَعَلَنِيْ مُبٰرَكًا اَيْنَ مَا كُنْتُۖ وَاَوْصٰنِيْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ۖ (مريم : ١٩)
- wajaʿalanī
- وَجَعَلَنِى
- And He (has) made me
- இன்னும் அவன் என்னை ஆக்குவான்
- mubārakan
- مُبَارَكًا
- blessed
- அருள்மிக்கவனாக
- ayna mā kuntu
- أَيْنَ مَا كُنتُ
- wherever wherever I am
- நான் எங்கிருந்தாலும்
- wa-awṣānī
- وَأَوْصَٰنِى
- and has enjoined (on) me
- எனக்கு கட்டளையிட்டுள்ளான்
- bil-ṣalati
- بِٱلصَّلَوٰةِ
- [of] the prayer
- தொழுகையைக் கொண்டும்
- wal-zakati
- وَٱلزَّكَوٰةِ
- and zakah
- ஸகாத்தைக் கொண்டும்
- mā dum'tu
- مَا دُمْتُ
- as long as I am as long as I am
- நான்இருக்கின்றவரை
- ḥayyan
- حَيًّا
- alive
- உயிருள்ளவனாக
Transliteration:
Wa ja'alanee mubaarakan aina maa kuntu wa awsaanee bis Salaati waz Zakaati maa dumtu haiyaa(QS. Maryam:31)
English Sahih International:
And He has made me blessed wherever I am and has enjoined upon me prayer and Zakah as long as I remain alive (QS. Maryam, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும் வரையில் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும் படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான். (ஸூரத்து மர்யம், வசனம் ௩௧)
Jan Trust Foundation
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவன் நான் எங்கிருந்தாலும் என்னை அருள்மிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவுகின்றவனாக) ஆக்குவான். நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையைக் கொண்டும் ஸகாத்தைக் கொண்டும் அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான்.