குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௯
Qur'an Surah Maryam Verse 29
ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَشَارَتْ اِلَيْهِۗ قَالُوْا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا (مريم : ١٩)
- fa-ashārat
- فَأَشَارَتْ
- Then she pointed
- ஜாடை காண்பித்தார்
- ilayhi
- إِلَيْهِۖ
- to him
- அதன் பக்கம்
- qālū
- قَالُوا۟
- They said
- அவர்கள் கூறினார்கள்
- kayfa
- كَيْفَ
- "How
- எப்படி
- nukallimu
- نُكَلِّمُ
- (can) we speak
- நாங்கள் பேசுவோம்
- man kāna
- مَن كَانَ
- (to one) who is
- இருக்கின்றவரிடம்
- fī l-mahdi
- فِى ٱلْمَهْدِ
- in the cradle
- மடியில்
- ṣabiyyan
- صَبِيًّا
- a child?"
- குழந்தையாக
Transliteration:
Fa ashaarat ilaih; qaaloo kaifa nukallimu man kaana fil mahdi sabiyyaa(QS. Maryam:29)
English Sahih International:
So she pointed to him. They said, "How can we speak to one who is in the cradle a child?" (QS. Maryam, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் "மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௯)
Jan Trust Foundation
(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (-மர்யம்) அ(ந்)த (குழந்தையி)ன் பக்கம் ஜாடை காண்பித்தார். அவர்கள் கூறினார்கள்: “மடியில் குழந்தையாக இருக்கின்றவரிடம் நாங்கள் எப்படி பேசுவோம்!”