Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௪

Qur'an Surah Maryam Verse 24

ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَنَادٰىهَا مِنْ تَحْتِهَآ اَلَّا تَحْزَنِيْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (مريم : ١٩)

fanādāhā
فَنَادَىٰهَا
So cried to her
அவரை அவர் கூவி அழைத்தார்
min taḥtihā
مِن تَحْتِهَآ
from beneath her
அதனுடைய அடிப்புறத்திலிருந்து
allā taḥzanī
أَلَّا تَحْزَنِى
"That (do) not grieve
கவலைப்படாதீர்
qad jaʿala
قَدْ جَعَلَ
verily (has) placed
ஏற்படுத்தி இருக்கின்றான்
rabbuki
رَبُّكِ
your Lord
உமது இறைவன்
taḥtaki
تَحْتَكِ
beneath you
உமக்குக் கீழ்
sariyyan
سَرِيًّا
a stream
ஓர் ஊற்றை

Transliteration:

Fanaadaahaa min tahtihaan allaa tahzanee qad ja'ala Rabbuki tahtaki sariyyaa (QS. Maryam:24)

English Sahih International:

But he called her from below her, "Do not grieve; your Lord has provided beneath you a stream. (QS. Maryam, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரீல்) சப்தமிட்டு "(மர்யமே!) நீங்கள் கவலைப்படாதீர்கள்! உங்களுக்குச் சமீபமாக உங்கள் இறைவன் ஓர் ஊற்று (உதித்து) ஓடச் செய்திருக்கிறான். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௪)

Jan Trust Foundation

(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து| “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதனுடைய (பேரிச்சமரத்தினுடைய) அடிப்புறத்திலிருந்து அவரை (மர்யமை) அவர் (ஜிப்ரயீல்) கூவி அழைத்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழ் ஓர் ஊற்றை ஏற்படுத்தி இருக்கின்றான்.”