Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௩

Qur'an Surah Maryam Verse 23

ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَجَاۤءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِۚ قَالَتْ يٰلَيْتَنِيْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا (مريم : ١٩)

fa-ajāahā
فَأَجَآءَهَا
Then drove her
கொண்டு சென்றது அவரை
l-makhāḍu
ٱلْمَخَاضُ
the pains of childbirth
பிரசவ வேதனை
ilā jidh'ʿi
إِلَىٰ جِذْعِ
to (the) trunk
மரத்தடிக்கு
l-nakhlati
ٱلنَّخْلَةِ
(of) the date-palm
பேரிச்சமரம்
qālat
قَالَتْ
She said
அவர் கூறினார்
yālaytanī mittu
يَٰلَيْتَنِى مِتُّ
"O! I wish I (had) died
நான் மரணிக்க வேண்டுமே
qabla
قَبْلَ
before
முன்னரே
hādhā
هَٰذَا
this
இதற்கு
wakuntu
وَكُنتُ
and I was
இன்னும் நான் இருக்க வேண்டுமே
nasyan mansiyyan
نَسْيًا مَّنسِيًّا
(in) oblivion forgotten"
முற்றிலும் மறக்கப்பட்டவளாக

Transliteration:

Fa ajaaa 'ahal makhaadu ilaa jiz'in nakhlati qaalat yaa laitanee mittu qabla haazaa wa kuntu nasyam mansiyyaa (QS. Maryam:23)

English Sahih International:

And the pains of childbirth drove her to the trunk of a palm tree. She said, "Oh, I wish I had died before this and was in oblivion, forgotten." (QS. Maryam, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு "இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என்னுடைய எண்ணமே(ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு)முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே" என்று (வேதனையுடன்) கூறினார். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௩)

Jan Trust Foundation

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது| “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிரசவ வேதனை அவரை பேரிச்சமரத்தடிக்கு கொண்டு சென்றது. அவர் கூறினார்: இதற்கு முன்னரே நான் மரணிக்க வேண்டுமே! முற்றிலும் மறக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க வேண்டுமே!