Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௧

Qur'an Surah Maryam Verse 21

ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ كَذٰلِكِۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌۚ وَلِنَجْعَلَهٗٓ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّاۚ وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا (مريم : ١٩)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
kadhāliki
كَذَٰلِكِ
"Thus;
அப்படித்தான் நடக்கும்
qāla
قَالَ
said
கூறுகிறான்
rabbuki
رَبُّكِ
your Lord
உமது இறைவன்
huwa
هُوَ
It
அது
ʿalayya
عَلَىَّ
(is) for Me
தனக்கு
hayyinun
هَيِّنٌۖ
easy
எளிதாகும்
walinajʿalahu
وَلِنَجْعَلَهُۥٓ
and so that We will make him
அவரை நாம் ஆக்குவதற்காகவும்
āyatan
ءَايَةً
a sign
ஓர் அத்தாட்சியாக
lilnnāsi
لِّلنَّاسِ
for the mankind
மனிதர்களுக்கு
waraḥmatan
وَرَحْمَةً
and a Mercy
ஓர் அருளாக
minnā
مِّنَّاۚ
from Us
நம்புறத்திலிருந்து
wakāna
وَكَانَ
And (it) is
இது இருக்கிறது
amran
أَمْرًا
a matter
ஒரு காரியமாக
maqḍiyyan
مَّقْضِيًّا
decreed'
முடிவுசெய்யப்பட்ட

Transliteration:

Qaala kazaaliki qaala Rabbuki huwa 'alaiya yaiyimunw wa linaj 'alahooo Aayatal linnaasi wa rahmatam minnaa; wa kaana amram maqdiyyaa (QS. Maryam:21)

English Sahih International:

He said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, and We will make him a sign to the people and a mercy from Us. And it is a matter [already] decreed.'" (QS. Maryam, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "அவ்வாறே (நடைபெறும் என்று) உங்கள் இறைவன் கூறுகின்றான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும், நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம் (என்றும்) இது முடிவாக உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம்" என்றும் கூறுகின்றான். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௧)

Jan Trust Foundation

“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (ஜிப்ரயீல்) கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான்: “அது தனக்கு எளிதாகும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவும் (இவ்வாறு நடைபெறும்). இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”