Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௦

Qur'an Surah Maryam Verse 20

ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِيْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا (مريم : ١٩)

qālat
قَالَتْ
She said
அவர் கூறினார்
annā
أَنَّىٰ
"How
எப்படி?
yakūnu lī
يَكُونُ لِى
can be for me
எனக்கு ஏற்படும்
ghulāmun
غُلَٰمٌ
a son
குழந்தை
walam yamsasnī
وَلَمْ يَمْسَسْنِى
when not has touched me
இன்னும் என்னை தொடவில்லை
basharun
بَشَرٌ
a man
ஓர் ஆடவர்
walam aku
وَلَمْ أَكُ
and not I am
இன்னும் நான் இல்லையே
baghiyyan
بَغِيًّا
unchaste?"
விபச்சாரியாக

Transliteration:

Qaalat anna yakoonu lee ghulaamunw wa lam yamsasnee bashrunw wa lam aku baghiyyaa (QS. Maryam:20)

English Sahih International:

She said, "How can I have a boy while no man has touched me and I have not been unchaste?" (QS. Maryam, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே" என்று கூறினார். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௦)

Jan Trust Foundation

அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் (-மர்யம்) கூறினார்: எனக்கு எப்படி குழந்தை ஏற்படும்?! என்னை ஓர் ஆடவர் (எவரும்) தொடவில்லையே! நான் விபசாரியாக இல்லையே!