Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௧௭

Qur'an Surah Maryam Verse 17

ஸூரத்து மர்யம் [௧௯]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًاۗ فَاَرْسَلْنَآ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا (مريم : ١٩)

fa-ittakhadhat
فَٱتَّخَذَتْ
Then she took
அவர் ஏற்படுத்திக் கொண்டார்
min dūnihim
مِن دُونِهِمْ
from them from them
அவர்களுக்கு முன்னாலிருந்து
ḥijāban
حِجَابًا
a screen
ஒரு திரையை
fa-arsalnā
فَأَرْسَلْنَآ
Then We sent
நாம் அனுப்பினோம்
ilayhā
إِلَيْهَا
to her
அவரிடம்
rūḥanā
رُوحَنَا
Our Spirit
நமது தூதரை
fatamathala
فَتَمَثَّلَ
then he assumed for her the likeness
அவர் தோன்றினார்
lahā
لَهَا
then he assumed for her the likeness
அவளுக்கு
basharan
بَشَرًا
(of) a man
ஒரு மனிதராக
sawiyyan
سَوِيًّا
well-proportioned
முழுமையான

Transliteration:

Fattakhazat min doonihim hijaaban fa arsalnaaa ilaihaa roohanaa fatamassala lahaa basharan sawiyyaa (QS. Maryam:17)

English Sahih International:

And she took, in seclusion from them, a screen. Then We sent to her Our Angel [i.e., Gabriel], and he represented himself to her as a well-proportioned man. (QS. Maryam, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

(குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரீல் என்னும்) நம்முடைய தூதரை அவரிடம் அனுப்பி வைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார். (ஸூரத்து மர்யம், வசனம் ௧௭)

Jan Trust Foundation

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு முன்னாலிருந்து ஒரு திரையை அவர் ஏற்படுத்திக் கொண்டார். அவரிடம் நமது தூதரை அனுப்பினோம். அவர் (-தூதர்)அவளுக்கு (முன்) ஒரு முழுமையான மனிதராகத் தோன்றினார்.