Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௧௨

Qur'an Surah Maryam Verse 12

ஸூரத்து மர்யம் [௧௯]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ ۗوَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّاۙ (مريم : ١٩)

yāyaḥyā
يَٰيَحْيَىٰ
"O Yahya!
யஹ்யாவே
khudhi
خُذِ
Hold
பற்றிப் பிடிப்பீராக
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Scripture
வேதத்தை
biquwwatin
بِقُوَّةٍۖ
with strength"
பலமாக
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
And We gave him
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
l-ḥuk'ma
ٱلْحُكْمَ
[the] wisdom
ஞானத்தை
ṣabiyyan
صَبِيًّا
(when he was) a child
சிறு குழந்தை

Transliteration:

Yaa Yahyaa khuzil Kitaaba biquwwatinw wa aatainaahul hukma saiyyaa (QS. Maryam:12)

English Sahih International:

[Allah said], "O John, take the Scripture [i.e., adhere to it] with determination." And We gave him judgement [while yet] a boy (QS. Maryam, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) "யஹ்யாவே! நீங்கள் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௧௨)

Jan Trust Foundation

(அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யஹ்யாவே! வேதத்தை பலமாகப் பற்றிப் பிடிப்பீராக! (வேதத்தைப் புரிவதற்கு) ஞானத்தை (அவர்) சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருக்குக் கொடுத்தோம்.