குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௧௧
Qur'an Surah Maryam Verse 11
ஸூரத்து மர்யம் [௧௯]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا (مريم : ١٩)
- fakharaja
- فَخَرَجَ
- Then he came out
- அவர் வெளியேறி வந்தார்
- ʿalā qawmihi
- عَلَىٰ قَوْمِهِۦ
- to his people
- தனது மக்களுக்கு முன்
- mina
- مِنَ
- from
- இருந்து
- l-miḥ'rābi
- ٱلْمِحْرَابِ
- the prayer chamber
- தொழுமிடம்
- fa-awḥā
- فَأَوْحَىٰٓ
- and he signaled
- ஜாடை காண்பித்தார்
- ilayhim
- إِلَيْهِمْ
- to them
- அவர்களை நோக்கி
- an sabbiḥū
- أَن سَبِّحُوا۟
- to glorify (Allah)
- துதியுங்கள் என்று
- buk'ratan
- بُكْرَةً
- (in) the morning
- காலையிலும்
- waʿashiyyan
- وَعَشِيًّا
- and (in) the evening
- மாலையிலும்
Transliteration:
Fakharaja 'alaa qawmihee minal mihraabi fa-awhaaa ilaihim an sabbihoo bukratanw wa 'ashiyyaa(QS. Maryam:11)
English Sahih International:
So he came out to his people from the prayer chamber and signaled to them to exalt [Allah] in the morning and afternoon. (QS. Maryam, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடையாகக் காண்பித்தார். (ஸூரத்து மர்யம், வசனம் ௧௧)
Jan Trust Foundation
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் தனது மக்களுக்கு முன் தொழுமிடத்திலிருந்து வெளியேறி வந்தார். அவர்களை நோக்கி “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வை) துதியுங்கள்”என்று ஜாடை காண்பித்தார்.