Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 9

Maryam

(Maryam)

௮௧

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّيَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۙ ٨١

wa-ittakhadhū
وَٱتَّخَذُوا۟
இன்னும் ஏற்படுத்திக் கொண்டனர்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
ālihatan
ءَالِهَةً
பல தெய்வங்களை
liyakūnū
لِّيَكُونُوا۟
அவை இருக்கும் என்பதற்காக
lahum
لَهُمْ
தங்களுக்கு
ʿizzan
عِزًّا
பாதுகாப்பாக
(இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௧)
Tafseer
௮௨

كَلَّا ۗسَيَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَيَكُوْنُوْنَ عَلَيْهِمْ ضِدًّا ࣖ ٨٢

kallā
كَلَّاۚ
அவ்வாறல்ல
sayakfurūna
سَيَكْفُرُونَ
அவை நிராகரித்து விடும்
biʿibādatihim
بِعِبَادَتِهِمْ
அவர்களின் வழிபாட்டை
wayakūnūna
وَيَكُونُونَ
இன்னும் அவை மாறிவிடும்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு
ḍiddan
ضِدًّا
எதிரானவையாக
அவ்வாறன்று; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௨)
Tafseer
௮௩

اَلَمْ تَرَ اَنَّآ اَرْسَلْنَا الشَّيٰطِيْنَ عَلَى الْكٰفِرِيْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۙ ٨٣

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
annā
أَنَّآ
நிச்சயமாக நாம்
arsalnā
أَرْسَلْنَا
ஏவி விட்டுள்ளோம்
l-shayāṭīna
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்களை
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது
ta-uzzuhum
تَؤُزُّهُمْ
பிடித்துஅசைக்கின்றன அவர்களை
azzan
أَزًّا
பிடித்து அசைத்தல்
(நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பி வைக்கின்றோம் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௩)
Tafseer
௮௪

فَلَا تَعْجَلْ عَلَيْهِمْۗ اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۗ ٨٤

falā taʿjal
فَلَا تَعْجَلْ
ஆகவே அவசரப்படாதீர்
ʿalayhim
عَلَيْهِمْۖ
அவர்கள் மீது
innamā
إِنَّمَا
நிச்சயமாக நாம்
naʿuddu
نَعُدُّ
எண்ணுகிறோம்
lahum
لَهُمْ
அவர்களுக்காக
ʿaddan
عَدًّا
எண்ணுதல்
ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீங்கள் அவசரப்படாதீர்கள். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௪)
Tafseer
௮௫

يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِيْنَ اِلَى الرَّحْمٰنِ وَفْدًا ٨٥

yawma
يَوْمَ
நாளில்...
naḥshuru
نَحْشُرُ
நாம் ஒன்று திரட்டுகின்(«)ற(£ம்)
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களை
ilā l-raḥmāni
إِلَى ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானின் பக்கம்
wafdan
وَفْدًا
குழுவாக
இறை அச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளி களைப் போல) கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில், ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௫)
Tafseer
௮௬

وَنَسُوْقُ الْمُجْرِمِيْنَ اِلٰى جَهَنَّمَ وِرْدًا ۘ ٨٦

wanasūqu
وَنَسُوقُ
இன்னும் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்(«)ற(£ம்)
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
பாவிகளை, குற்றவாளிகளை
ilā jahannama
إِلَىٰ جَهَنَّمَ
நரகத்தின் பக்கம்
wir'dan
وِرْدًا
தாகித்தவர்களாக
குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின்பக்கம் ஓட்டுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௬)
Tafseer
௮௭

لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ ٨٧

lā yamlikūna
لَّا يَمْلِكُونَ
அவர்கள் உரிமை பெறமாட்டார்கள்
l-shafāʿata
ٱلشَّفَٰعَةَ
சிபாரிசுக்கு
illā
إِلَّا
தவிர
mani ittakhadha
مَنِ ٱتَّخَذَ
ஏற்படுத்தியவரை
ʿinda l-raḥmāni
عِندَ ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானிடம்
ʿahdan
عَهْدًا
ஓர் ஒப்பந்தத்தை
ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச சக்தி பெற மாட்டார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௭)
Tafseer
௮௮

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۗ ٨٨

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறுகிறார்கள்
ittakhadha
ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
waladan
وَلَدًا
குழந்தையை
ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்த)வர்கள் கூறுகின்றனர். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௮)
Tafseer
௮௯

لَقَدْ جِئْتُمْ شَيْـًٔا اِدًّا ۙ ٨٩

laqad
لَّقَدْ
திட்டமாக
ji'tum
جِئْتُمْ
சொல்லி விட்டீர்கள்
shayan
شَيْـًٔا
ஒரு காரியத்தை
iddan
إِدًّا
பெரிய
(நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௯)
Tafseer
௯௦

تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ ٩٠

takādu
تَكَادُ
நெருங்கி விட்டன
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
yatafaṭṭarna min'hu
يَتَفَطَّرْنَ مِنْهُ
துண்டு துண்டாகி விடுவதற்கு
watanshaqqu
وَتَنشَقُّ
இன்னும் பிளந்து விடுவதற்கு
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
watakhirru
وَتَخِرُّ
இன்னும் விழுந்து விடுவதற்கு
l-jibālu
ٱلْجِبَالُ
மலைகள்
haddan
هَدًّا
விழுவது
(இதனால்) வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்துவிடவும் கூடும். (அவ்வளவு பெரிய அபாண்டத்தை நீங்கள் கூறுகின்றீர்கள். அதாவது:) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௦)
Tafseer