Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 8

Maryam

(Maryam)

௭௧

وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ۚ ٧١

wa-in minkum
وَإِن مِّنكُمْ
உங்களில் (ஒவ்வொருவரும்) இல்லை
illā wāriduhā
إِلَّا وَارِدُهَاۚ
தவிர/அதில் நுழையக்கூடியவராக
kāna
كَانَ
இருக்கிறது
ʿalā rabbika
عَلَىٰ رَبِّكَ
உமது இறைவன் மீது
ḥatman
حَتْمًا
தீர்ப்பாக
maqḍiyyan
مَّقْضِيًّا
முடிவு செய்யப்பட்ட
அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௧)
Tafseer
௭௨

ثُمَّ نُنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا ٧٢

thumma
ثُمَّ
பிறகு
nunajjī
نُنَجِّى
பாதுகாப்போம்
alladhīna ittaqaw
ٱلَّذِينَ ٱتَّقَوا۟
இறையச்சமுடையவர்களை
wanadharu
وَّنَذَرُ
இன்னும் விட்டுவிடுவோம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
fīhā
فِيهَا
அதில்
jithiyyan
جِثِيًّا
முழந்தாளிட்ட வர்களாக
ஆனால், நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௨)
Tafseer
௭௩

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْٓاۙ اَيُّ الْفَرِيْقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِيًّا ٧٣

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
āyātunā
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான
qāla
قَالَ
கூறுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களுக்கு
ayyu
أَىُّ
யார்?
l-farīqayni
ٱلْفَرِيقَيْنِ
இரு பிரிவினரில்
khayrun
خَيْرٌ
சிறந்தவர்
maqāman
مَّقَامًا
தங்குமிடத்தால்
wa-aḥsanu
وَأَحْسَنُ
மிக அழகானவர்
nadiyyan
نَدِيًّا
சபையால்
நிராகரிப்பவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஓரிறை நம்பிக்கையாளர்களை நோக்கி "நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௩)
Tafseer
௭௪

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْيًا ٧٤

wakam
وَكَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
qablahum
قَبْلَهُم
அவர்களுக்கு முன்
min qarnin
مِّن قَرْنٍ
தலைமுறையினரை
hum
هُمْ
அவர்கள்
aḥsanu
أَحْسَنُ
மிக அழகானவர்கள்
athāthan
أَثَٰثًا
பொருட்களாலும்
wari'yan
وَرِءْيًا
தோற்றத்தாலும்
இவர்களைவிட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கின்றோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௪)
Tafseer
௭௫

قُلْ مَنْ كَانَ فِى الضَّلٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ەۚ حَتّٰىٓ اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ۗفَسَيَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ٧٥

qul
قُلْ
கூறுவீராக
man
مَن
யார்
kāna
كَانَ
இருக்கின்றாரோ
fī l-ḍalālati
فِى ٱلضَّلَٰلَةِ
வழிகேட்டில்
falyamdud
فَلْيَمْدُدْ
நீட்டிவிடட்டும்
lahu
لَهُ
அவருக்கு
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
maddan
مَدًّاۚ
நீட்டிவிடுதல்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā ra-aw
إِذَا رَأَوْا۟
அவர்கள் பார்த்தால்
mā yūʿadūna
مَا يُوعَدُونَ
அவர்கள் வாக்களிக்கப்பட்டதை
immā
إِمَّا
ஒன்று
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
wa-immā
وَإِمَّا
அல்லது
l-sāʿata
ٱلسَّاعَةَ
மறுமையை
fasayaʿlamūna
فَسَيَعْلَمُونَ
அறிவார்கள்
man
مَنْ
யார்
huwa
هُوَ
என்பதை
sharrun
شَرٌّ
மிகக் கெட்டவர்
makānan
مَّكَانًا
தங்குமிடத்தால்
wa-aḍʿafu
وَأَضْعَفُ
மிகப் பலவீனமானவர்
jundan
جُندًا
படையால்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரையில் ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும் அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௫)
Tafseer
௭௬

وَيَزِيْدُ اللّٰهُ الَّذِيْنَ اهْتَدَوْا هُدًىۗ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ مَّرَدًّا ٧٦

wayazīdu
وَيَزِيدُ
அதிகப்படுத்துவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna ih'tadaw
ٱلَّذِينَ ٱهْتَدَوْا۟
நேர்வழி நடப்போருக்கு
hudan
هُدًىۗ
நேர்வழியை
wal-bāqiyātu
وَٱلْبَٰقِيَٰتُ
நிரந்தரமான
l-ṣāliḥātu
ٱلصَّٰلِحَٰتُ
நன்மைகள்தான்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
ʿinda rabbika
عِندَ رَبِّكَ
உங்கள் இறைவனிடம்
thawāban
ثَوَابًا
நற்கூலியால்
wakhayrun
وَخَيْرٌ
இன்னும் மிகச் சிறந்தது
maraddan
مَّرَدًّا
முடிவால்
நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௬)
Tafseer
௭௭

اَفَرَاَيْتَ الَّذِيْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَاُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا ۗ ٧٧

afara-ayta
أَفَرَءَيْتَ
நீர் பார்த்தீரா?
alladhī kafara
ٱلَّذِى كَفَرَ
நிராகரித்தவனை
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது வசனங்களை
waqāla
وَقَالَ
கூறுகின்றான்
laūtayanna
لَأُوتَيَنَّ
நிச்சயமாக நான் கொடுக்கப்படுவேன்
mālan
مَالًا
செல்வமும்
wawaladan
وَوَلَدًا
சந்ததியும்
(நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் ("மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்" என்று கூறுகிறான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௭)
Tafseer
௭௮

اَطَّلَعَ الْغَيْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۙ ٧٨

aṭṭalaʿa
أَطَّلَعَ
அறிந்துகொண்டானா
l-ghayba
ٱلْغَيْبَ
மறைவானதை
ami
أَمِ
அல்லது
ittakhadha
ٱتَّخَذَ
ஏற்படுத்திக் கொண்டானா
ʿinda l-raḥmāni
عِندَ ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானிடம்
ʿahdan
عَهْدًا
ஓர் ஒப்பந்தத்தை
இவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்துகொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௮)
Tafseer
௭௯

كَلَّاۗ سَنَكْتُبُ مَا يَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۙ ٧٩

kallā
كَلَّاۚ
ஒருக்காலும் அவ்வாறல்ல
sanaktubu
سَنَكْتُبُ
பதிவு செய்கிறோம்
mā yaqūlu
مَا يَقُولُ
அவன் கூறுவதை
wanamuddu
وَنَمُدُّ
இன்னும் அதிகப்படுத்துவோம்
lahu
لَهُۥ
அவனுக்கு
mina l-ʿadhābi
مِنَ ٱلْعَذَابِ
வேதனையில்
maddan
مَدًّا
அதிகப்படுத்துதல்
(இவன் கூறுகிறபடி) அன்று! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக்கொண்டே வருகின்றோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்தி விடுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௯)
Tafseer
௮௦

وَّنَرِثُهٗ مَا يَقُوْلُ وَيَأْتِيْنَا فَرْدًا ٨٠

wanarithuhu
وَنَرِثُهُۥ
இன்னும் வாரிசாகி விடுவோம்
mā yaqūlu
مَا يَقُولُ
அவன் கூறியவற்றுக்கு
wayatīnā
وَيَأْتِينَا
இன்னும் நம்மிடம் வருவான்
fardan
فَرْدًا
தனியாக
அவன் (தன்னுடையதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவைகளை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௦)
Tafseer