Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 7

Maryam

(Maryam)

௬௧

جَنّٰتِ عَدْنِ ِۨالَّتِيْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَيْبِۗ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَأْتِيًّا ٦١

jannāti
جَنَّٰتِ
சொர்க்கங்களில்
ʿadnin
عَدْنٍ
அத்ன்
allatī waʿada
ٱلَّتِى وَعَدَ
எது/வாக்களித்துள்ளான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
ʿibādahu
عِبَادَهُۥ
தன் அடியார்களுக்கு
bil-ghaybi
بِٱلْغَيْبِۚ
மறைவில்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கிறது
waʿduhu
وَعْدُهُۥ
அவனுடைய வாக்கு
matiyyan
مَأْتِيًّا
நிகழக்கூடியதாக
அது "அத்ன்" என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கின்றான். (அது தற்சமயம்) மறைவாக இருந்த போதிலும் நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௧)
Tafseer
௬௨

لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا اِلَّا سَلٰمًاۗ وَلَهُمْ رِزْقُهُمْ فِيْهَا بُكْرَةً وَّعَشِيًّا ٦٢

lā yasmaʿūna
لَّا يَسْمَعُونَ
செவிமடுக்க மாட்டார்கள்
fīhā
فِيهَا
அவற்றில்
laghwan
لَغْوًا
வீணானவற்றை
illā
إِلَّا
எனினும்
salāman
سَلَٰمًاۖ
ஸலாமை
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
riz'quhum
رِزْقُهُمْ
அவர்களுடைய உணவு
fīhā
فِيهَا
அவற்றில்
buk'ratan
بُكْرَةً
காலையிலும்
waʿashiyyan
وَعَشِيًّا
மாலையிலும்
(அவற்றில்) ஸலாம் என்பதைத் தவிர (ஸலாம் என்ற முகமனைத் தவிர) வீணான வார்த்தைகளைச் செவியுறார். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௨)
Tafseer
௬௩

تِلْكَ الْجَنَّةُ الَّتِيْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا ٦٣

til'ka
تِلْكَ
இந்த
l-janatu
ٱلْجَنَّةُ
சொர்க்கம்
allatī nūrithu
ٱلَّتِى نُورِثُ
வாரிசாக ஆக்குவோம்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
man kāna
مَن كَانَ
எவர்/இருக்கின்றார்
taqiyyan
تَقِيًّا
இறையச்சமுடையவராக
இத்தகைய சுவனத்திற்கு நம் அடியார்களில் இறை அச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௩)
Tafseer
௬௪

وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَۚ لَهٗ مَا بَيْنَ اَيْدِيْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذٰلِكَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا ۚ ٦٤

wamā natanazzalu
وَمَا نَتَنَزَّلُ
இறங்க மாட்டோம்
illā bi-amri
إِلَّا بِأَمْرِ
உத்தரவைக் கொண்டே தவிர
rabbika
رَبِّكَۖ
உமது இறைவனின்
lahu
لَهُۥ
அவனுக்கே சொந்தம்
mā bayna aydīnā
مَا بَيْنَ أَيْدِينَا
எங்களுக்கு முன் இருப்பவையும்
wamā khalfanā
وَمَا خَلْفَنَا
எங்களுக்கு பின் இருப்பவையும்
wamā bayna dhālika
وَمَا بَيْنَ ذَٰلِكَۚ
அவற்றுக்கு மத்தியில் இருப்பவையும்
wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
rabbuka
رَبُّكَ
உமது இறைவன்
nasiyyan
نَسِيًّا
மறதியாளனாக
(நம்முடைய மலக்குகள் கூறுகின்றனர்: நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவைகளும், பின்னிருப்பவைகளும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவைகளும் அவனுக்குச் சொந்தமானவைகளே. இதில் (யாதொன்றையும்) உங்கள் இறைவன் மறப்பவனன்று. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௪)
Tafseer
௬௫

رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖۗ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا ࣖ ٦٥

rabbu
رَّبُّ
இறைவன்
l-samāwāti wal-arḍi
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவை
fa-uʿ'bud'hu
فَٱعْبُدْهُ
ஆகவே, அவனை வணங்குவீராக
wa-iṣ'ṭabir
وَٱصْطَبِرْ
இன்னும் பொறுமையாக இருப்பீராக
liʿibādatihi
لِعِبَٰدَتِهِۦۚ
அவனை வணங்குவதில்
hal taʿlamu
هَلْ تَعْلَمُ
நீர் அறிவீரா
lahu
لَهُۥ
அவனுக்கு
samiyyan
سَمِيًّا
ஒப்பானவரை
வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவனும் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு வழிப்படுவதில் (உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும்) நீங்கள் சகித்துக் கொள்ளுங்கள். அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீங்கள் அறிவீர்களா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௫)
Tafseer
௬௬

وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا ٦٦

wayaqūlu
وَيَقُولُ
கூறுகிறான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
a-idhā mā mittu
أَءِذَا مَا مِتُّ
நான் மரணித்து விட்டால்
lasawfa ukh'raju
لَسَوْفَ أُخْرَجُ
கண்டிப்பாக எழுப்பப்படுவேனா
ḥayyan
حَيًّا
உயிருள்ளவனாக
(இவ்வாறிருக்க) மனிதன் "நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?" என்று (பரிகாசமாகக்) கேட்கிறான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௬)
Tafseer
௬௭

اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًٔا ٦٧

awalā yadhkuru
أَوَلَا يَذْكُرُ
சிந்திக்க வேண்டாமா!
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
khalaqnāhu
خَلَقْنَٰهُ
அவனைப் படைத்ததை
min qablu
مِن قَبْلُ
முன்னர்
walam yaku
وَلَمْ يَكُ
அவன் இருக்கவில்லை
shayan
شَيْـًٔا
எந்த ஒரு பொருளாகவும்
இதற்கு முன்னர் யாதொரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௭)
Tafseer
௬௮

فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا ٦٨

fawarabbika
فَوَرَبِّكَ
உம் இறைவன் மீது சத்தியமாக
lanaḥshurannahum
لَنَحْشُرَنَّهُمْ
நிச்சயமாக நாம் அவர்களை எழுப்புவோம்
wal-shayāṭīna
وَٱلشَّيَٰطِينَ
இன்னும் ஷைத்தான்களை
thumma
ثُمَّ
பிறகு
lanuḥ'ḍirannahum
لَنُحْضِرَنَّهُمْ
அவர்களைக் கொண்டு வருவோம்
ḥawla
حَوْلَ
சுற்றி
jahannama
جَهَنَّمَ
நரகத்தை
jithiyyan
جِثِيًّا
முழந்தாளிட்டவர்களாக
ஆகவே, (நபியே!) உங்களது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், இவர்கள் வணங்குகிற ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௮)
Tafseer
௬௯

ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا ۚ ٦٩

thumma
ثُمَّ
பிறகு
lananziʿanna
لَنَنزِعَنَّ
கழட்டி எடுப்போம்
min kulli
مِن كُلِّ
ஒவ்வொரு
shīʿatin
شِيعَةٍ
கூட்டத்திலும்
ayyuhum
أَيُّهُمْ
அவர்களில்
ashaddu
أَشَدُّ
கடுமையானவரை
ʿalā l-raḥmāni
عَلَى ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
ʿitiyyan
عِتِيًّا
பாவம் செய்வதில்
பின்னர், ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக இருந்தவர்கள் அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௯)
Tafseer
௭௦

ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِيْنَ هُمْ اَوْ لٰى بِهَا صِلِيًّا ٧٠

thumma
ثُمَّ
பிறகு
lanaḥnu
لَنَحْنُ
நாம்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவர்கள்
bi-alladhīna hum
بِٱلَّذِينَ هُمْ
எவர்கள்/அவர்கள்
awlā
أَوْلَىٰ
மிகவும் தகுதியானவர்கள்
bihā
بِهَا
அதில்
ṣiliyyan
صِلِيًّا
கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு
பின்னர், அவர்களில் நரகத்தை அடைய மிக்க தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௦)
Tafseer