Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 5

Maryam

(Maryam)

௪௧

وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ ەۗ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا ٤١

wa-udh'kur
وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
ib'rāhīma
إِبْرَٰهِيمَۚ
இப்றாஹீமை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
இருக்கிறார்
ṣiddīqan
صِدِّيقًا
உண்மையாளராக
nabiyyan
نَّبِيًّا
நபியாக
(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராகவும் நபியாகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௧)
Tafseer
௪௨

اِذْ قَالَ لِاَبِيْهِ يٰٓاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِيْ عَنْكَ شَيْـًٔا ٤٢

idh qāla
إِذْ قَالَ
(அந்த) சமயத்தை கூறினார்
li-abīhi
لِأَبِيهِ
தனது தந்தைக்கு
yāabati
يَٰٓأَبَتِ
என் தந்தையே
lima taʿbudu
لِمَ تَعْبُدُ
ஏன் வணங்குகிறீர்?
mā lā yasmaʿu
مَا لَا يَسْمَعُ
கேட்காதவற்றை
walā yub'ṣiru
وَلَا يُبْصِرُ
இன்னும் பார்க்காதவற்றை
walā yugh'nī
وَلَا يُغْنِى
இன்னும் தடுக்காதவற்றை
ʿanka
عَنكَ
உம்மை விட்டு
shayan
شَيْـًٔا
எதையும்
அவர் தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! யாதொன்றைப் பார்க்கவும், கேட்கவும், யாதொரு தீங்கை உங்களுக்குத் தடைசெய்யவும் சக்தியற்ற தெய்வங்களை நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்?" என்று கேட்டார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௨)
Tafseer
௪௩

يٰٓاَبَتِ اِنِّي قَدْ جَاۤءَنِيْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَاتَّبِعْنِيْٓ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا ٤٣

yāabati
يَٰٓأَبَتِ
என் தந்தையே
innī
إِنِّى
நிச்சயமாக நான்
qad jāanī
قَدْ جَآءَنِى
எனக்கு வந்திருக்கிறது
mina l-ʿil'mi
مِنَ ٱلْعِلْمِ
கல்வியில்
mā lam yatika
مَا لَمْ يَأْتِكَ
உமக்கு வரவில்லை
fa-ittabiʿ'nī
فَٱتَّبِعْنِىٓ
ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக
ahdika
أَهْدِكَ
நான் உமக்கு வழிகாட்டுவேன்
ṣirāṭan
صِرَٰطًا
பாதையை
sawiyyan
سَوِيًّا
நேரான
(அன்றி) "என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத கல்வி ஞானத்தை நான் (என் இறைவன் அருளால்) அடைந்திருக்கிறேன். நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நேரான வழியில் நடத்துவேன். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௩)
Tafseer
௪௪

يٰٓاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَۗ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا ٤٤

yāabati
يَٰٓأَبَتِ
என் தந்தையே
lā taʿbudi
لَا تَعْبُدِ
வணங்காதீர்
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَۖ
ஷைத்தானை
inna
إِنَّ
நிச்சயமாக
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَ
ஷைத்தான்
kāna
كَانَ
இருக்கிறான்
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
ʿaṣiyyan
عَصِيًّا
மாறுசெய்பவனாக
என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கின்றான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௪)
Tafseer
௪௫

يٰٓاَبَتِ اِنِّيْٓ اَخَافُ اَنْ يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا ٤٥

yāabati
يَٰٓأَبَتِ
என் தந்தையே
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
நான் பயப்படுகிறேன்
an yamassaka
أَن يَمَسَّكَ
உம்மைவந்தடைந்தால்
ʿadhābun
عَذَابٌ
ஒரு வேதனை
mina
مِّنَ
இருந்து
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளன்
fatakūna
فَتَكُونَ
நீர் ஆகிவிடுவீர்
lilshayṭāni
لِلشَّيْطَٰنِ
ஷைத்தானுக்கு
waliyyan
وَلِيًّا
நண்பராக
என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று மெய்யாகவே நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கே நண்பர்களாகி விடுவீர்கள்" (என்று கூறினார்). ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௫)
Tafseer
௪௬

قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِيْ يٰٓاِبْرٰهِيْمُ ۚ لَىِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِيْ مَلِيًّا ٤٦

qāla
قَالَ
கூறினார்
arāghibun
أَرَاغِبٌ
நீ வெறுக்கிறாயா?
anta
أَنتَ
நீ
ʿan ālihatī
عَنْ ءَالِهَتِى
என் தெய்வங்களை
yāib'rāhīmu
يَٰٓإِبْرَٰهِيمُۖ
இப்றாஹீமே
la-in lam tantahi
لَئِن لَّمْ تَنتَهِ
நீர் விலகவில்லை என்றால்
la-arjumannaka
لَأَرْجُمَنَّكَۖ
நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன்
wa-uh'jur'nī
وَٱهْجُرْنِى
இன்னும் என்னை விட்டு விலகிவிடு
maliyyan
مَلِيًّا
பாதுகாப்புப் பெற்றவராக
அதற்கவர் "இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக்கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீங்கள் எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்" என்று கூறினார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௬)
Tafseer
௪௭

قَالَ سَلٰمٌ عَلَيْكَۚ سَاَسْتَغْفِرُ لَكَ رَبِّيْۗ اِنَّهٗ كَانَ بِيْ حَفِيًّا ٤٧

qāla
قَالَ
கூறினார்
salāmun
سَلَٰمٌ
பாதுகாப்பு உண்டாகுக
ʿalayka
عَلَيْكَۖ
உமக்கு
sa-astaghfiru
سَأَسْتَغْفِرُ
பாவமன்னிப்புக் கோருவேன்
laka
لَكَ
உமக்காக
rabbī
رَبِّىٓۖ
என் இறைவனிடம்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
بِى
என் மீது
ḥafiyyan
حَفِيًّا
அருளுடையவனாக
அதற்கு (இப்ராஹீம், இதோ நான் செல்கிறேன்) "உங்களுக்குச் ஈடேற்றம் உண்டாவதாக! பின்னர் நான் உங்களுக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்" என்று கூறினார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௭)
Tafseer
௪௮

وَاَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْ رَبِّيْۖ عَسٰٓى اَلَّآ اَكُوْنَ بِدُعَاۤءِ رَبِّيْ شَقِيًّا ٤٨

wa-aʿtazilukum
وَأَعْتَزِلُكُمْ
இன்னும் உங்களை விட்டு விலகி விடுகின்றேன்
wamā tadʿūna
وَمَا تَدْعُونَ
இன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றை
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
wa-adʿū
وَأَدْعُوا۟
நான் பிரார்த்திப்பேன்
rabbī
رَبِّى
என் இறைவனிடம்
ʿasā allā akūna
عَسَىٰٓ أَلَّآ أَكُونَ
ஆகாமல் இருப்பேன்
biduʿāi
بِدُعَآءِ
பிரார்த்திப்பதில்
rabbī
رَبِّى
என் இறைவனிடம்
shaqiyyan
شَقِيًّا
நம்பிக்கை அற்றவனாக
"உங்களைவிட்டும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வமென) அழைப்பவைகளை விட்டும் நான் விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த் தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்" (என்றும் கூறினார்.) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௮)
Tafseer
௪௯

فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙوَهَبْنَا لَهٗٓ اِسْحٰقَ وَيَعْقُوْبَۗ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا ٤٩

falammā iʿ'tazalahum
فَلَمَّا ٱعْتَزَلَهُمْ
அவர் அவர்களை விட்டு விலகியபோது
wamā yaʿbudūna
وَمَا يَعْبُدُونَ
இன்னும் அவர்கள் வணங்கியதை
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
wahabnā
وَهَبْنَا
வழங்கினோம்
lahu
لَهُۥٓ
அவருக்கு
is'ḥāqa
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கை
wayaʿqūba
وَيَعْقُوبَۖ
இன்னும் யஃகூபை
wakullan
وَكُلًّا
இன்னும் ஒவ்வொருவரையும்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
nabiyyan
نَبِيًّا
நபியாக
பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாத தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் அளித்தோம். அவர்கள் ஒவ்வொரு வரையும் நபியாகவும் ஆக்கினோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௯)
Tafseer
௫௦

وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا ࣖ ٥٠

wawahabnā
وَوَهَبْنَا
வழங்கினோம்
lahum
لَهُم
அவர்களுக்கு
min raḥmatinā
مِّن رَّحْمَتِنَا
நமது அருளிலிருந்து
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
lisāna
لِسَانَ
புகழை
ṣid'qin
صِدْقٍ
உண்மையான
ʿaliyyan
عَلِيًّا
உயர்வான
அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் "அலைஹிஸ் ஸலாம்" என்று எந்நாளும் துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௦)
Tafseer