Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 4

Maryam

(Maryam)

௩௧

وَّجَعَلَنِيْ مُبٰرَكًا اَيْنَ مَا كُنْتُۖ وَاَوْصٰنِيْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ۖ ٣١

wajaʿalanī
وَجَعَلَنِى
இன்னும் அவன் என்னை ஆக்குவான்
mubārakan
مُبَارَكًا
அருள்மிக்கவனாக
ayna mā kuntu
أَيْنَ مَا كُنتُ
நான் எங்கிருந்தாலும்
wa-awṣānī
وَأَوْصَٰنِى
எனக்கு கட்டளையிட்டுள்ளான்
bil-ṣalati
بِٱلصَّلَوٰةِ
தொழுகையைக் கொண்டும்
wal-zakati
وَٱلزَّكَوٰةِ
ஸகாத்தைக் கொண்டும்
mā dum'tu
مَا دُمْتُ
நான்இருக்கின்றவரை
ḥayyan
حَيًّا
உயிருள்ளவனாக
நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும் வரையில் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும் படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௧)
Tafseer
௩௨

وَّبَرًّاۢ بِوَالِدَتِيْ وَلَمْ يَجْعَلْنِيْ جَبَّارًا شَقِيًّا ٣٢

wabarran
وَبَرًّۢا
நன்மைசெய்பவனாக
biwālidatī
بِوَٰلِدَتِى
என் தாய்க்கு
walam yajʿalnī
وَلَمْ يَجْعَلْنِى
இன்னும் அவன் என்னை ஆக்கவில்லை
jabbāran
جَبَّارًا
பெருமையுடையவனாக
shaqiyyan
شَقِيًّا
தீயவனாக
என்னுடைய தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து, நான் முரடனாகவும் வழி தப்பியவனாகவும் ஆகாதபடியும் செய்வான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௨)
Tafseer
௩௩

وَالسَّلٰمُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا ٣٣

wal-salāmu
وَٱلسَّلَٰمُ
ஈடேற்றம் உண்டாகுக
ʿalayya
عَلَىَّ
எனக்கு
yawma
يَوْمَ
நாளிலும்
wulidttu
وُلِدتُّ
நான் பிறந்த
wayawma amūtu
وَيَوْمَ أَمُوتُ
நான் மரணிக்கின்றநாளிலும்
wayawma ub'ʿathu
وَيَوْمَ أُبْعَثُ
நான் எழுப்பப்படுகின்ற நாளிலும்
ḥayyan
حَيًّا
உயிருள்ளவனாக
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும்" (என்றும் அக்குழந்தை கூறியது). ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௩)
Tafseer
௩௪

ذٰلِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ۚقَوْلَ الْحَقِّ الَّذِيْ فِيْهِ يَمْتَرُوْنَ ٣٤

dhālika
ذَٰلِكَ
இவர்தான்
ʿīsā
عِيسَى
ஈஸா
ub'nu
ٱبْنُ
மகன்
maryama
مَرْيَمَۚ
மர்யமுடைய
qawla
قَوْلَ
கூறுங்கள்
l-ḥaqi
ٱلْحَقِّ
உண்மையானகூற்றை
alladhī fīhi
ٱلَّذِى فِيهِ
எது/இதில்தான்
yamtarūna
يَمْتَرُونَ
அவர்கள் தர்க்கிக்கின்றனர்
இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௪)
Tafseer
௩௫

مَا كَانَ لِلّٰهِ اَنْ يَّتَّخِذَ مِنْ وَّلَدٍ سُبْحٰنَهٗ ۗاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ ۗ ٣٥

mā kāna
مَا كَانَ
தகுந்ததல்ல
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
an yattakhidha
أَن يَتَّخِذَ
அவன் எடுத்துக் கொள்வது
min waladin
مِن وَلَدٍۖ
குழந்தையை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥٓۚ
அவன் மகா பரிசுத்தமானவன்
idhā qaḍā
إِذَا قَضَىٰٓ
அவன் முடிவு செய்தால்
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
fa-innamā yaqūlu
فَإِنَّمَا يَقُولُ
அவன் கூறுவதெல்லாம்
lahu
لَهُۥ
அதற்கு
kun
كُن
ஆகு
fayakūnu
فَيَكُونُ
அது ஆகிவிடும்
ஆகவே, (அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும் தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். யாதொன்றை படைக்கக் கருதினால் அதனை "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௫)
Tafseer
௩௬

وَاِنَّ اللّٰهَ رَبِّيْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ۗهٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ ٣٦

wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்தான்
rabbī
رَبِّى
என் இறைவனும்
warabbukum
وَرَبُّكُمْ
உங்கள் இறைவனும்
fa-uʿ'budūhu
فَٱعْبُدُوهُۚ
ஆகவே, அவனையே வணங்குங்கள்!
hādhā
هَٰذَا
இதுதான்
ṣirāṭun mus'taqīmun
صِرَٰطٌ مُّسْتَقِيمٌ
நேரான பாதை
நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்களது இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி (என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௬)
Tafseer
௩௭

فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْۚ فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ يَوْمٍ عَظِيْمٍ ٣٧

fa-ikh'talafa
فَٱخْتَلَفَ
ஆனால் தர்க்கித்தனர்
l-aḥzābu
ٱلْأَحْزَابُ
பல பிரிவினர்
min baynihim
مِنۢ بَيْنِهِمْۖ
தங்களுக்கு மத்தியில்
fawaylun
فَوَيْلٌ
ஆகவே கேடுதான்
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களுக்கு
min mashhadi
مِن مَّشْهَدِ
அவர் காணும்போது
yawmin
يَوْمٍ
நாளை
ʿaẓīmin
عَظِيمٍ
மகத்தான
ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதனை, நிராகரிப்பவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் அவர்களுக்குக் கேடுதான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௭)
Tafseer
௩௮

اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْۙ يَوْمَ يَأْتُوْنَنَا لٰكِنِ الظّٰلِمُوْنَ الْيَوْمَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٣٨

asmiʿ
أَسْمِعْ
நன்றாக செவிசாய்ப்பார்கள்
bihim
بِهِمْ
அவர்கள்
wa-abṣir
وَأَبْصِرْ
நன்றாக பார்ப்பார்கள்
yawma
يَوْمَ
நாளில்
yatūnanā
يَأْتُونَنَاۖ
நம்மிடம் அவர்கள் வருகின்ற
lākini
لَٰكِنِ
எனினும்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
l-yawma
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(இன்றைய தினம் இதனை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம்முடைய கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவி சாய்ப்பார்கள். (நம்முடைய வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௮)
Tafseer
௩௯

وَاَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِيَ الْاَمْرُۘ وَهُمْ فِيْ غَفْلَةٍ وَّهُمْ لَا يُؤْمِنُوْنَ ٣٩

wa-andhir'hum
وَأَنذِرْهُمْ
அவர்களை எச்சரிப்பீராக
yawma
يَوْمَ
நாளை(ப் பற்றி)
l-ḥasrati
ٱلْحَسْرَةِ
துயரமான
idh quḍiya l-amru
إِذْ قُضِىَ ٱلْأَمْرُ
தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது
wahum
وَهُمْ
அவர்கள் இருக்கின்றனர்
fī ghaflatin
فِى غَفْلَةٍ
அறியாமையில்
wahum
وَهُمْ
அவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௯)
Tafseer
௪௦

اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَيْهَا وَاِلَيْنَا يُرْجَعُوْنَ ࣖ ٤٠

innā naḥnu
إِنَّا نَحْنُ
நிச்சயமாக நாம்தான்
narithu
نَرِثُ
வாரிசாகுவோம்
l-arḍa waman ʿalayhā
ٱلْأَرْضَ وَمَنْ عَلَيْهَا
பூமி/இன்னும் அதில் இருப்பவர்களுக்கு
wa-ilaynā
وَإِلَيْنَا
இன்னும் நம்மிடமே
yur'jaʿūna
يُرْجَعُونَ
அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவைகளுக்கும் அனந்தரம் கொள்வோம். அவர்கள் (அனைவரும்) நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪௦)
Tafseer