Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 3

Maryam

(Maryam)

௨௧

قَالَ كَذٰلِكِۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَيَّ هَيِّنٌۚ وَلِنَجْعَلَهٗٓ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّاۚ وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا ٢١

qāla
قَالَ
அவர் கூறினார்
kadhāliki
كَذَٰلِكِ
அப்படித்தான் நடக்கும்
qāla
قَالَ
கூறுகிறான்
rabbuki
رَبُّكِ
உமது இறைவன்
huwa
هُوَ
அது
ʿalayya
عَلَىَّ
தனக்கு
hayyinun
هَيِّنٌۖ
எளிதாகும்
walinajʿalahu
وَلِنَجْعَلَهُۥٓ
அவரை நாம் ஆக்குவதற்காகவும்
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
lilnnāsi
لِّلنَّاسِ
மனிதர்களுக்கு
waraḥmatan
وَرَحْمَةً
ஓர் அருளாக
minnā
مِّنَّاۚ
நம்புறத்திலிருந்து
wakāna
وَكَانَ
இது இருக்கிறது
amran
أَمْرًا
ஒரு காரியமாக
maqḍiyyan
مَّقْضِيًّا
முடிவுசெய்யப்பட்ட
அதற்கவர் "அவ்வாறே (நடைபெறும் என்று) உங்கள் இறைவன் கூறுகின்றான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சியாகவும், நம்முடைய அருளாகவும் நாம் செய்வோம் (என்றும்) இது முடிவாக உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம்" என்றும் கூறுகின்றான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௧)
Tafseer
௨௨

۞ فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا ٢٢

faḥamalathu
فَحَمَلَتْهُ
பின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள்
fa-intabadhat bihi
فَٱنتَبَذَتْ بِهِۦ
அதனுடன் விலகிச் சென்றார்
makānan
مَكَانًا
இடத்திற்கு
qaṣiyyan
قَصِيًّا
தூரமான
பின்னர், மர்யமுக்கு(த் தானாகவே) கர்ப்பமேற்பட்டு கர்ப்பத்துடன் (அவர் இருந்த இடத்திலேயே வெளியேறி) தூரத்திலுள்ள ஒரு இடத்தைச் சென்றடைந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௨)
Tafseer
௨௩

فَاَجَاۤءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِۚ قَالَتْ يٰلَيْتَنِيْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا ٢٣

fa-ajāahā
فَأَجَآءَهَا
கொண்டு சென்றது அவரை
l-makhāḍu
ٱلْمَخَاضُ
பிரசவ வேதனை
ilā jidh'ʿi
إِلَىٰ جِذْعِ
மரத்தடிக்கு
l-nakhlati
ٱلنَّخْلَةِ
பேரிச்சமரம்
qālat
قَالَتْ
அவர் கூறினார்
yālaytanī mittu
يَٰلَيْتَنِى مِتُّ
நான் மரணிக்க வேண்டுமே
qabla
قَبْلَ
முன்னரே
hādhā
هَٰذَا
இதற்கு
wakuntu
وَكُنتُ
இன்னும் நான் இருக்க வேண்டுமே
nasyan mansiyyan
نَسْيًا مَّنسِيًّا
முற்றிலும் மறக்கப்பட்டவளாக
பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு "இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என்னுடைய எண்ணமே(ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு)முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே" என்று (வேதனையுடன்) கூறினார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௩)
Tafseer
௨௪

فَنَادٰىهَا مِنْ تَحْتِهَآ اَلَّا تَحْزَنِيْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا ٢٤

fanādāhā
فَنَادَىٰهَا
அவரை அவர் கூவி அழைத்தார்
min taḥtihā
مِن تَحْتِهَآ
அதனுடைய அடிப்புறத்திலிருந்து
allā taḥzanī
أَلَّا تَحْزَنِى
கவலைப்படாதீர்
qad jaʿala
قَدْ جَعَلَ
ஏற்படுத்தி இருக்கின்றான்
rabbuki
رَبُّكِ
உமது இறைவன்
taḥtaki
تَحْتَكِ
உமக்குக் கீழ்
sariyyan
سَرِيًّا
ஓர் ஊற்றை
(பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரீல்) சப்தமிட்டு "(மர்யமே!) நீங்கள் கவலைப்படாதீர்கள்! உங்களுக்குச் சமீபமாக உங்கள் இறைவன் ஓர் ஊற்று (உதித்து) ஓடச் செய்திருக்கிறான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௪)
Tafseer
௨௫

وَهُزِّيْٓ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا ۖ ٢٥

wahuzzī
وَهُزِّىٓ
இன்னும் அசைப்பீராக
ilayki
إِلَيْكِ
உம் பக்கம்
bijidh'ʿi
بِجِذْعِ
நடுத்தண்டை
l-nakhlati
ٱلنَّخْلَةِ
பேரிச்ச மரத்தின்
tusāqiṭ
تُسَٰقِطْ
கொட்டும்
ʿalayki
عَلَيْكِ
உம்மீது
ruṭaban
رُطَبًا
பழங்களை
janiyyan
جَنِيًّا
பழுத்த
இப்பேரீச்ச மரத்தின் கிளையை, நீங்கள் உங்கள் பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குங்கள். அது பழுத்த பழங்களை உங்கள் மீது சொரியும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௫)
Tafseer
௨௬

فَكُلِيْ وَاشْرَبِيْ وَقَرِّيْ عَيْنًا ۚفَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًاۙ فَقُوْلِيْٓ اِنِّيْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ۚ ٢٦

fakulī
فَكُلِى
இன்னும் நீர் புசிப்பீராக
wa-ish'rabī
وَٱشْرَبِى
பருகுவீராக
waqarrī
وَقَرِّى
குளிர்வீராக
ʿaynan
عَيْنًاۖ
கண்
fa-immā tarayinna
فَإِمَّا تَرَيِنَّ
ஆகவே நீர் பார்த்தால்
mina l-bashari
مِنَ ٱلْبَشَرِ
மனிதரில்
aḥadan
أَحَدًا
யாரையும்
faqūlī
فَقُولِىٓ
கூறுவீராக
innī nadhartu
إِنِّى نَذَرْتُ
நிச்சயமாக நான்/நேர்ச்சை செய்துள்ளேன்
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
ṣawman
صَوْمًا
நோன்பை
falan ukallima
فَلَنْ أُكَلِّمَ
ஆகவே நான் அறவே பேசமாட்டேன்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
insiyyan
إِنسِيًّا
எந்த மனிதனிடமும்
(அப்பழங்களை) நீங்கள் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) நீங்கள் (உங்கள்) கண் குளிர்ந்திருங்கள்! நீங்கள் மனிதரில் எவரைக் கண்டபோதிலும் "நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்கிறேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன்" என்று கூறிவிடுங்கள் என்றும் கூறினார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௬)
Tafseer
௨௭

فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ۗقَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـًٔا فَرِيًّا ٢٧

fa-atat
فَأَتَتْ
அவர் வந்தார்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
qawmahā
قَوْمَهَا
தனது மக்களிடம்
taḥmiluhu
تَحْمِلُهُۥۖ
அதைச் சுமந்தவராக
qālū
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
yāmaryamu
يَٰمَرْيَمُ
மர்யமே!
laqad ji'ti
لَقَدْ جِئْتِ
நீ செய்து விட்டாய்
shayan
شَيْـًٔا
ஒரு காரியத்தை
fariyyan
فَرِيًّا
பெரிய
பின்னர், (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) "மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௭)
Tafseer
௨௮

يٰٓاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَبُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا ۖ ٢٨

yāukh'ta
يَٰٓأُخْتَ
சகோதரியே
hārūna
هَٰرُونَ
ஹாரூனுடைய
mā kāna
مَا كَانَ
இருக்கவில்லை
abūki
أَبُوكِ
உமது தந்தை
im'ra-a sawin
ٱمْرَأَ سَوْءٍ
கெட்டவராக
wamā kānat
وَمَا كَانَتْ
இருக்கவில்லை
ummuki
أُمُّكِ
உமது தாயும்
baghiyyan
بَغِيًّا
நடத்தைகெட்டவளாக
ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக்கெட்டவளாக இருக்கவில்லையே!" என்று கூறினார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௮)
Tafseer
௨௯

فَاَشَارَتْ اِلَيْهِۗ قَالُوْا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا ٢٩

fa-ashārat
فَأَشَارَتْ
ஜாடை காண்பித்தார்
ilayhi
إِلَيْهِۖ
அதன் பக்கம்
qālū
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
kayfa
كَيْفَ
எப்படி
nukallimu
نُكَلِّمُ
நாங்கள் பேசுவோம்
man kāna
مَن كَانَ
இருக்கின்றவரிடம்
fī l-mahdi
فِى ٱلْمَهْدِ
மடியில்
ṣabiyyan
صَبِيًّا
குழந்தையாக
(அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் "மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்" என்று கூறினார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨௯)
Tafseer
௩௦

قَالَ اِنِّيْ عَبْدُ اللّٰهِ ۗاٰتٰنِيَ الْكِتٰبَ وَجَعَلَنِيْ نَبِيًّا ۙ ٣٠

qāla
قَالَ
அவர் கூறினார்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ʿabdu
عَبْدُ
அடிமை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ātāniya
ءَاتَىٰنِىَ
எனக்குக்கொடுப்பான்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wajaʿalanī
وَجَعَلَنِى
என்னை ஆக்குவான்
nabiyyan
نَبِيًّا
நபியாக
(இதனைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய ஓர் அடிமை. அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩௦)
Tafseer