௯௧
اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۚ ٩١
- an daʿaw
- أَن دَعَوْا۟
- அவர்கள் ஏற்படுத்தியதால்
- lilrraḥmāni
- لِلرَّحْمَٰنِ
- ரஹ்மானுக்கு
- waladan
- وَلَدًا
- குழந்தையை
ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதுதான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௧)Tafseer
௯௨
وَمَا يَنْۢبَغِيْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ۗ ٩٢
- wamā yanbaghī
- وَمَا يَنۢبَغِى
- தகுந்ததல்ல
- lilrraḥmāni
- لِلرَّحْمَٰنِ
- ரஹ்மானுக்கு
- an yattakhidha
- أَن يَتَّخِذَ
- ஏற்படுத்திக்கொள்வது
- waladan
- وَلَدًا
- குழந்தையை
சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதன்று. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௨)Tafseer
௯௩
اِنْ كُلُّ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّآ اٰتِى الرَّحْمٰنِ عَبْدًا ۗ ٩٣
- in
- إِن
- இல்லை
- kullu
- كُلُّ
- ஒவ்வொருவரும்
- man fī l-samāwāti
- مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ள
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியில்
- illā
- إِلَّآ
- தவிர
- ātī
- ءَاتِى
- வருவாரே
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- பேரருளாளனிடம்
- ʿabdan
- عَبْدًا
- அடிமையாக
ஏனென்றால், வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகின்றது. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௩)Tafseer
௯௪
لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۗ ٩٤
- laqad
- لَّقَدْ
- திட்டமாக
- aḥṣāhum
- أَحْصَىٰهُمْ
- அவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான்
- waʿaddahum
- وَعَدَّهُمْ
- இன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்
- ʿaddan
- عَدًّا
- எண்ணுதல்
அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கின்றான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௪)Tafseer
௯௫
وَكُلُّهُمْ اٰتِيْهِ يَوْمَ الْقِيٰمَةِ فَرْدًا ٩٥
- wakulluhum
- وَكُلُّهُمْ
- அவர்கள் ஒவ்வொருவரும்
- ātīhi
- ءَاتِيهِ
- அவனிடம் வருவார்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- fardan
- فَرْدًا
- தனியாக
அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் எவருடைய உதவியுமின்றி அவனிடம் தனித்தனியாகவே வரும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௫)Tafseer
௯௬
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ٩٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்கள்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- sayajʿalu
- سَيَجْعَلُ
- ஏற்படுத்துவான்
- lahumu
- لَهُمُ
- அவர்களுக்கு
- l-raḥmānu
- ٱلرَّحْمَٰنُ
- பேரருளாளன்
- wuddan
- وُدًّا
- அன்பை
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௬)Tafseer
௯௭
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِيْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا ٩٧
- fa-innamā yassarnāhu
- فَإِنَّمَا يَسَّرْنَٰهُ
- இதை நாம் இலகுவாக்கியதெல்லாம்
- bilisānika
- بِلِسَانِكَ
- உமது நாவில்
- litubashira
- لِتُبَشِّرَ
- நீர் நற்செய்தி கூறுவதற்காகவும்
- bihi
- بِهِ
- இதன் மூலம்
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- இறையச்சமுள்ளவர்களுக்கு
- watundhira
- وَتُنذِرَ
- நீர் எச்சரிப்பதற்காகவும்
- bihi
- بِهِۦ
- இதன் மூலம்
- qawman
- قَوْمًا
- மக்களை
- luddan
- لُّدًّا
- தர்க்கிக்கின்ற(வர்கள்)
(நபியே!) உங்களுடைய மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் நீங்கள் இறை அச்சமுடையவர்களுக்கு நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௭)Tafseer
௯௮
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍۗ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ࣖ ٩٨
- wakam
- وَكَمْ
- எத்தனையோ
- ahlaknā
- أَهْلَكْنَا
- நாம் அழித்தோம்
- qablahum
- قَبْلَهُم
- இவர்களுக்கு முன்
- min qarnin
- مِّن قَرْنٍ
- தலைமுறையினரை
- hal tuḥissu
- هَلْ تُحِسُّ
- நீர் பார்க்கிறீரா?
- min'hum
- مِنْهُم
- அவர்களில்
- min aḥadin
- مِّنْ أَحَدٍ
- யாரையும்
- aw
- أَوْ
- அல்லது
- tasmaʿu
- تَسْمَعُ
- நீர் கேட்கிறீரா
- lahum
- لَهُمْ
- அவர்களுடைய
- rik'zan
- رِكْزًۢا
- சப்தத்தை
இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களில் ஒருவரையேனும் நீங்கள் காண்கின்றீர்களா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தை யேனும் நீங்கள் கேட்கின்றீர்களா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௮)Tafseer