كۤهٰيٰعۤصۤ ۚ ١
- kaf-ha-ya-ain-sad
- كٓهيعٓصٓ
- காஃப் ஹா யா ஐன் ஸாத்
காஃப்; ஹா; யா; ஐன்; ஸாத். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧)Tafseer
ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِيَّا ۚ ٢
- dhik'ru
- ذِكْرُ
- நினைவு கூர்வது
- raḥmati
- رَحْمَتِ
- அருள் செய்ததை
- rabbika
- رَبِّكَ
- உமது இறைவன்
- ʿabdahu
- عَبْدَهُۥ
- தன் அடியார்
- zakariyyā
- زَكَرِيَّآ
- ஸகரிய்யாவுக்கு
(நபியே!) உங்களது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருள் (இங்கு) கூறப்படுகிறது. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨)Tafseer
اِذْ نَادٰى رَبَّهٗ نِدَاۤءً خَفِيًّا ٣
- idh nādā
- إِذْ نَادَىٰ
- அவர் அழைத்தபோது
- rabbahu
- رَبَّهُۥ
- தன் இறைவனை
- nidāan
- نِدَآءً
- அழைத்தல்
- khafiyyan
- خَفِيًّا
- மறைவாக
அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்து, ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩)Tafseer
قَالَ رَبِّ اِنِّيْ وَهَنَ الْعَظْمُ مِنِّيْ وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَاۤىِٕكَ رَبِّ شَقِيًّا ٤
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- என் இறைவா!
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- wahana
- وَهَنَ
- பலவீனமடைந்து விட்டது
- l-ʿaẓmu
- ٱلْعَظْمُ
- எலும்பு
- minnī
- مِنِّى
- என்னில்
- wa-ish'taʿala
- وَٱشْتَعَلَ
- வெளுத்து விட்டது
- l-rasu
- ٱلرَّأْسُ
- தலை
- shayban
- شَيْبًا
- நரையால்
- walam akun
- وَلَمْ أَكُنۢ
- நான் ஆகமாட்டேன்
- biduʿāika
- بِدُعَآئِكَ
- உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- shaqiyyan
- شَقِيًّا
- துர்பாக்கியவனாக
"என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்துவிட்டது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கின்றாய்.) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪)Tafseer
وَاِنِّيْ خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَّرَاۤءِيْ وَكَانَتِ امْرَاَتِيْ عَاقِرًا فَهَبْ لِيْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ ٥
- wa-innī
- وَإِنِّى
- நிச்சயமாக நான்
- khif'tu
- خِفْتُ
- பயப்படுகிறேன்
- l-mawāliya
- ٱلْمَوَٰلِىَ
- உறவினர்களை
- min warāī
- مِن وَرَآءِى
- எனக்குப் பின்னால்
- wakānati
- وَكَانَتِ
- இன்னும் இருக்கிறாள்
- im'ra-atī
- ٱمْرَأَتِى
- என் மனைவி
- ʿāqiran
- عَاقِرًا
- மலடியாக
- fahab
- فَهَبْ
- ஆகவே, தா!
- lī
- لِى
- எனக்கு
- min ladunka
- مِن لَّدُنكَ
- உன் புறத்திலிருந்து
- waliyyan
- وَلِيًّا
- ஒரு வாரிசை
நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளனைப் பற்றிப் பயப்படுகிறேன். என்னுடைய மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கு பாதுகாவலனை ( ஒரு பிள்ளையை) வழங்குவாயாக! ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫)Tafseer
يَّرِثُنِيْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا ٦
- yarithunī
- يَرِثُنِى
- அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார்
- wayarithu
- وَيَرِثُ
- இன்னும் வாரிசாக ஆகுவார்
- min āli
- مِنْ ءَالِ
- கிளையினருக்கு
- yaʿqūba
- يَعْقُوبَۖ
- யஃகூபுடைய
- wa-ij'ʿalhu
- وَٱجْعَلْهُ
- இன்னும் அவரை ஆக்கு
- rabbi
- رَبِّ
- என் இறைவா!
- raḍiyyan
- رَضِيًّا
- பொருந்திக் கொள்ளப்பட்டவராக
அவன் எனக்கும், யஃகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக்கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை" என்று பிரார்த்தித்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬)Tafseer
يٰزَكَرِيَّآ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ ِۨاسْمُهٗ يَحْيٰىۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا ٧
- yāzakariyyā
- يَٰزَكَرِيَّآ
- ஸகரிய்யாவே!
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- nubashiruka
- نُبَشِّرُكَ
- உமக்கு நற்செய்தி தருகிறோம்
- bighulāmin
- بِغُلَٰمٍ
- ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு
- us'muhu
- ٱسْمُهُۥ
- அதன் பெயர்
- yaḥyā
- يَحْيَىٰ
- யஹ்யா
- lam najʿal
- لَمْ نَجْعَل
- நாம் படைக்கவில்லை
- lahu
- لَّهُۥ
- அதற்கு
- min qablu
- مِن قَبْلُ
- இதற்கு முன்
- samiyyan
- سَمِيًّا
- ஒப்பானவரை
(அதற்கு இறைவன் அவரை நோக்கி) "ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் "யஹ்யா" என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உங்களுக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்.) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭)Tafseer
قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِيْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا ٨
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- annā
- أَنَّىٰ
- எப்படி?
- yakūnu
- يَكُونُ
- கிடைக்கும்
- lī
- لِى
- எனக்கு
- ghulāmun
- غُلَٰمٌ
- குழந்தை
- wakānati
- وَكَانَتِ
- இருக்கிறாள்
- im'ra-atī
- ٱمْرَأَتِى
- என் மனைவி
- ʿāqiran
- عَاقِرًا
- மலடியாக
- waqad balaghtu
- وَقَدْ بَلَغْتُ
- நானோ அடைந்து விட்டேன்
- mina l-kibari
- مِنَ ٱلْكِبَرِ
- முதுமையின்
- ʿitiyyan
- عِتِيًّا
- எல்லையை
அதற்கவர் "என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என்னுடைய மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்துவிட்டேன்" என்று கூறினார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮)Tafseer
قَالَ كَذٰلِكَۗ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـًٔا ٩
- qāla
- قَالَ
- கூறினான்
- kadhālika
- كَذَٰلِكَ
- அப்படித்தான்
- qāla
- قَالَ
- கூறினான்
- rabbuka
- رَبُّكَ
- உம் இறைவன்
- huwa
- هُوَ
- அது
- ʿalayya
- عَلَىَّ
- எனக்கு
- hayyinun
- هَيِّنٌ
- மிக எளிது
- waqad
- وَقَدْ
- திட்டமாக
- khalaqtuka
- خَلَقْتُكَ
- நான் உன்னைப் படைத்திருக்கிறேன்
- min qablu
- مِن قَبْلُ
- இதற்கு முன்னர்
- walam taku
- وَلَمْ تَكُ
- நீர் இருக்காதபோது
- shayan
- شَيْـًٔا
- ஒரு பொருளாக
அதற்கவன் "(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அவ்வாறு செய்வது எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீங்கள் ஒன்றுமில்லாமலிருந்த சமயத்தில் நானே உங்களை படைத்தேன் என்று உங்களது இறைவனே கூறுகிறான்" என்றும் கூறினான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯)Tafseer
قَالَ رَبِّ اجْعَلْ لِّيْٓ اٰيَةً ۗقَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا ١٠
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- ij'ʿal lī
- ٱجْعَل لِّىٓ
- எனக்கு ஏற்படுத்து
- āyatan
- ءَايَةًۚ
- ஓர் அத்தாட்சியை
- qāla
- قَالَ
- அவன் கூறினான்
- āyatuka
- ءَايَتُكَ
- உமக்கு அத்தாட்சியாகும்
- allā tukallima
- أَلَّا تُكَلِّمَ
- பேசாமல் இருப்பது தான்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களிடம்
- thalātha
- ثَلَٰثَ
- மூன்று
- layālin
- لَيَالٍ
- இரவுகள்
- sawiyyan
- سَوِيًّا
- நீர் சுகமாக இருக்க
அதற்கவர் "என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி" என்று கேட்டார். (அதற்கு இறைவன்) "உங்களுக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது: நீங்கள் (சுகவாசியாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்" என்று கூறினான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௦)Tafseer