Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯௬

Qur'an Surah Al-Kahf Verse 96

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اٰتُوْنِيْ زُبَرَ الْحَدِيْدِۗ حَتّٰىٓ اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوْا ۗحَتّٰىٓ اِذَا جَعَلَهٗ نَارًاۙ قَالَ اٰتُوْنِيْٓ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ۗ (الكهف : ١٨)

ātūnī
ءَاتُونِى
Bring me
கொண்டு வாருங்கள் என்னிடம்
zubara
زُبَرَ
sheets
பாலங்களை
l-ḥadīdi
ٱلْحَدِيدِۖ
(of) iron"
இரும்பு
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā sāwā
إِذَا سَاوَىٰ
when he (had) leveled
அவை சமமாகினால்
bayna l-ṣadafayni
بَيْنَ ٱلصَّدَفَيْنِ
between the two cliffs
இரு மலைகளின் உச்சிகளுக்கு
qāla
قَالَ
he said
கூறினார்
unfukhū
ٱنفُخُوا۟ۖ
"Blow"
ஊதுங்கள்
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā jaʿalahu
إِذَا جَعَلَهُۥ
when he made it
ஆக்கினால்/அவற்றை
nāran
نَارًا
fire
நெருப்பாக
qāla
قَالَ
he said
கூறினார்
ātūnī
ءَاتُونِىٓ
"Bring me
கொண்டு வாருங்கள் என்னிடம்
uf'righ
أُفْرِغْ
I pour
ஊற்றுவேன்
ʿalayhi
عَلَيْهِ
over it
அதன் மீது
qiṭ'ran
قِطْرًا
molten copper"
செம்பை

Transliteration:

Aatoonee zubaral hadeed, hattaaa izaa saawaa bainas sadafaini qaalan fukhoo hattaaa izaa ja'alahoo naaran qaala aatooneee ufrigh 'alaihi qitraa (QS. al-Kahf:96)

English Sahih International:

Bring me bars of iron" – until, when he had leveled [them] between the two mountain walls, he said, "Blow [with bellows]," until when he had made it [like] fire, he said, "Bring me, that I may pour over it molten copper." (QS. Al-Kahf, Ayah ௯௬)

Abdul Hameed Baqavi:

"நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றும் கூறி, "(அவைகளைக் கொண்டு வந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரையில் அதை ஊதுங்கள்" என்றார். (அதன் பின்னர்) "செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதனை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்" என்றார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯௬)

Jan Trust Foundation

“நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(தேவையான) இரும்பு பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இறுதியாக, இரு மலைகளின் உச்சிகளுக்கு அவை சமமாகினால், (அதில் நெருப்பை மூட்ட) ஊதுங்கள் என்று கூறினார். இறுதியாக, (ஊதி) அவற்றை (பழுத்த) நெருப்பாக ஆக்கினால் “என்னிடம் (செம்பைக்) கொண்டு வாருங்கள். (அந்த) செம்பை (உருக்கி) அதன் மீது ஊற்றுவேன்”என்று கூறினார்.