Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯௫

Qur'an Surah Al-Kahf Verse 95

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ مَا مَكَّنِّيْ فِيْهِ رَبِّيْ خَيْرٌ فَاَعِيْنُوْنِيْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ (الكهف : ١٨)

qāla
قَالَ
He said
கூறினார்
mā makkannī
مَا مَكَّنِّى
"What has established me
எது/எனக்கு ஆற்றல் அளித்துள்ளான்
fīhi
فِيهِ
[in it]
அதில்
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
khayrun
خَيْرٌ
(is) better
மிக்க மேலானது
fa-aʿīnūnī
فَأَعِينُونِى
but assist me
ஆகவே எனக்கு உதவுங்கள்
biquwwatin
بِقُوَّةٍ
with strength
வலிமையைக்கொண்டு
ajʿal
أَجْعَلْ
I will make
ஏற்படுத்துவேன்
baynakum
بَيْنَكُمْ
between you
உங்களுக்கிடையில்
wabaynahum
وَبَيْنَهُمْ
and between them
அவர்களுக்கிடையில்
radman
رَدْمًا
a barrier
பலமான ஒரு தடுப்பை

Transliteration:

Qaala maa makkannee feehi Rabbee khairun fa-a'eenoonee biquwwatin aj'al bainakum wa bainahum radmaa (QS. al-Kahf:95)

English Sahih International:

He said, "That in which my Lord has established me is better [than what you offer], but assist me with strength [i.e., manpower]; I will make between you and them a dam. (QS. Al-Kahf, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவர், "என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு (மதில் சுவற்றைத்) தடுப்பாக எழுப்பிவிடுகிறேன்" என்றும், (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯௫)

Jan Trust Foundation

அதற்கவர்| “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கூறினார்: “என் இறைவன் எதில் எனக்கு ஆற்றல் அளித்துள்ளானோ அதுவே (போதுமானதும்) மிக்க மேலானது(ம் ஆகும்). ஆகவே, (உங்கள் உழைப்பு எனும்) வலிமையைக்கொண்டு எனக்கு உதவுங்கள். உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் பலமான ஒரு தடுப்பை ஏற்படுத்துவேன்”