Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯௩

Qur'an Surah Al-Kahf Verse 93

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَتّٰىٓ اِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًاۙ لَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ قَوْلًا (الكهف : ١٨)

ḥattā
حَتَّىٰٓ
Until
இறுதியாக
idhā balagha
إِذَا بَلَغَ
when he reached
அவர் அடைந்தபோது
bayna
بَيْنَ
between
இடையில்
l-sadayni
ٱلسَّدَّيْنِ
the two mountains
இரு மலைகள்
wajada
وَجَدَ
he found
கண்டார்
min dūnihimā
مِن دُونِهِمَا
besides them besides them
அவ்விரண்டிற்கும் முன்னால்
qawman
قَوْمًا
a community
ஒரு சமுதாயத்தை
lā yakādūna yafqahūna
لَّا يَكَادُونَ يَفْقَهُونَ
not who would almost understand
அவர்கள் எளிதில் விளங்க(முடிய)£து
qawlan
قَوْلًا
(his) speech
பேச்சை

Transliteration:

Hattaaa izaa balagha bainas saddaini wajada min doonihimaa qawmal laa yakaa doona yafqahoona qawlaa (QS. al-Kahf:93)

English Sahih International:

Until, when he reached [a pass] between two mountains, he found beside them a people who could hardly understand [his] speech. (QS. Al-Kahf, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

(அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு அப்பாலும் மக்கள் சிலரைக் கண்டார். அவர்களுடைய பேச்சு (எளிதில்) விளங்கக்கூடியதாக இருக்கவில்லை, (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯௩)

Jan Trust Foundation

இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, (அங்கிருந்த) இரு மலைகளுக்கு இடையில் (உள்ள ஓர் இடத்தை) அவர் அடைந்தபோது அவ்விரண்டிற்கும் முன்னால் (பிறருடைய) பேச்சை எளிதில் விளங்கமுடியாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்