குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௯௦
Qur'an Surah Al-Kahf Verse 90
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَتّٰىٓ اِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلٰى قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُوْنِهَا سِتْرًا ۙ (الكهف : ١٨)
- ḥattā
- حَتَّىٰٓ
- Until
- இறுதியாக
- idhā balagha
- إِذَا بَلَغَ
- when he reached
- அவர் அடைந்தபோது
- maṭliʿa
- مَطْلِعَ
- (the) rising place
- உதிக்குமிடத்தை
- l-shamsi
- ٱلشَّمْسِ
- (of) the sun
- சூரியன்
- wajadahā
- وَجَدَهَا
- and he found it
- கண்டார்/அதை
- taṭluʿu
- تَطْلُعُ
- rising
- உதிப்பதாக
- ʿalā qawmin
- عَلَىٰ قَوْمٍ
- on a community
- மீது/ஒரு சமுதாயம்
- lam najʿal
- لَّمْ نَجْعَل
- not We made
- நாம் ஆக்கவில்லை
- lahum
- لَّهُم
- for them
- அவர்களுக்கு
- min dūnihā
- مِّن دُونِهَا
- against it against it
- அதற்கு முன்னாலிருந்து
- sit'ran
- سِتْرًا
- any shelter
- ஒரு தடுப்பை
Transliteration:
Hattaaa izaa balagha matli'ash shamsi wajdahaa tatlu'u alaa qawmil lam naj'al lahum min doonihaa sitraa(QS. al-Kahf:90)
English Sahih International:
Until, when he came to the rising of the sun [i.e., the east], he found it rising on a people for whom We had not made against it any shield. (QS. Al-Kahf, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் யாதொரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக்கூடிய ஞானம் இல்லாத காட்டு மிராண்டிகளாக இருந்தனர்.) (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௯௦)
Jan Trust Foundation
அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக, அவர் சூரியன் உதிக்குமிடத்தை (கிழக்குத் திசையை) அடைந்தபோது ஒரு சமுதாயத்தின் மீது உதிப்பதாக அதைக் கண்டார். அதற்கு முன்னாலிருந்து (அதன் வெப்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றும் நிழல் தரும் மலை, மரம், வீடு போன்ற) ஒரு தடுப்பை அவர்களுக்கு நாம் ஆக்கவில்லை.