குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௮௬
Qur'an Surah Al-Kahf Verse 86
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَتّٰىٓ اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِيْ عَيْنٍ حَمِئَةٍ وَّوَجَدَ عِنْدَهَا قَوْمًا ەۗ قُلْنَا يٰذَا الْقَرْنَيْنِ اِمَّآ اَنْ تُعَذِّبَ وَاِمَّآ اَنْ تَتَّخِذَ فِيْهِمْ حُسْنًا (الكهف : ١٨)
- ḥattā
- حَتَّىٰٓ
- Until
- இறுதியாக
- idhā balagha
- إِذَا بَلَغَ
- when he reached
- அவர் அடைந்தபோது
- maghriba
- مَغْرِبَ
- (the) setting place
- மறையும் இடத்தை
- l-shamsi
- ٱلشَّمْسِ
- (of) the sun
- சூரியன்
- wajadahā
- وَجَدَهَا
- he found it
- கண்டார்/அதை
- taghrubu
- تَغْرُبُ
- setting
- மறைவதாக
- fī ʿaynin
- فِى عَيْنٍ
- in a spring
- கடலில்
- ḥami-atin
- حَمِئَةٍ
- (of) dark mud
- சேறு
- wawajada
- وَوَجَدَ
- and he found
- கண்டார்
- ʿindahā
- عِندَهَا
- near it
- அதனிடத்தில்
- qawman
- قَوْمًاۗ
- a community
- சில மக்களை
- qul'nā
- قُلْنَا
- We said
- கூறினோம்
- yādhā l-qarnayni
- يَٰذَا ٱلْقَرْنَيْنِ
- "O Dhul-qarnain! "O Dhul-qarnain!
- துல்கர்னைனே!
- immā an tuʿadhiba
- إِمَّآ أَن تُعَذِّبَ
- Either [that] you punish
- ஒன்று வேதனை செய்வீர்
- wa-immā an tattakhidha
- وَإِمَّآ أَن تَتَّخِذَ
- or [that] you take
- அவர்கள் கடைப்பிடிப்பீர்
- fīhim
- فِيهِمْ
- [in] them
- அவர்களில்
- ḥus'nan
- حُسْنًا
- (with) goodness"
- ஓர் அழகியதை
Transliteration:
Hattaaa izaa balagha maghribash shamsi wajadahaaa taghrubu fee 'aynin hami'a tinw wa wajada 'indahaa qawmaa; qulnaa yaa Zal Qarnaini immaaa an tu'az ziba wa immaaa an tattakhiza feehim husnaa(QS. al-Kahf:86)
English Sahih International:
Until, when he reached the setting of the sun [i.e., the west], he found it [as if] setting in a body of dark water, and he found near it a people. We [i.e., Allah] said, "O Dhul-Qarnayn, either you punish [them] or else adopt among them [a way of] goodness." (QS. Al-Kahf, Ayah ௮௬)
Abdul Hameed Baqavi:
சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்தபொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) "துல்கர்னைனே! நீங்கள் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்ய அல்லது அவர்களுக்கு நன்மை செய்ய (உங்களுக்கு முழு சுதந்தரம் அளித்திருக்கிறோம்)" என்று கூறினோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௮௬)
Jan Trust Foundation
சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக, சூரியன் மறையும் இடத்தை (மேற்குத் திசையை) அவர் அடைந்தபோது சேற்றுக் கடலில் மறைவதாக அதைக் கண்டார். அதனிடத்தில் (ஒருவகையான) சில மக்களைக் கண்டார். (நாம் அவரை நோக்கி) “துல்கர்னைனே! ஒன்று, (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்வீர், அல்லது, அவர்களில் ஓர் அழகிய (நடத்)தை(யை) கடைப்பிடி(த்து மன்னி)ப்பீர். (இரண்டும் உமக்கு அனுமதிக்கப்பட்டதே!)” என்று கூறினோம்.