குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௭௪
Qur'an Surah Al-Kahf Verse 74
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَانْطَلَقَا ۗحَتّٰٓى اِذَا لَقِيَا غُلٰمًا فَقَتَلَهٗ ۙقَالَ اَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً؈ۢبِغَيْرِ نَفْسٍۗ لَقَدْ جِئْتَ شَيْـًٔا نُكْرًا ۔ (الكهف : ١٨)
- fa-inṭalaqā
- فَٱنطَلَقَا
- Then they both set out
- ஆகவே, இருவரும் சென்றனர்
- ḥattā
- حَتَّىٰٓ
- until
- இறுதியாக
- idhā laqiyā
- إِذَا لَقِيَا
- when they met
- இருவரும் சந்தித்தபோது
- ghulāman
- غُلَٰمًا
- a boy
- ஒரு சிறுவனை
- faqatalahu
- فَقَتَلَهُۥ
- then he killed him
- கொன்றார்/அவனை
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- aqatalta
- أَقَتَلْتَ
- "Have you killed
- கொன்றீரா?
- nafsan
- نَفْسًا
- a soul
- ஓர் உயிரை
- zakiyyatan
- زَكِيَّةًۢ
- pure
- பரிசுத்தமானது
- bighayri nafsin
- بِغَيْرِ نَفْسٍ
- for other than a soul?
- ஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றி
- laqad
- لَّقَدْ
- Certainly
- திட்டவட்டமாக
- ji'ta
- جِئْتَ
- you have done
- செய்தீர்
- shayan
- شَيْـًٔا
- a thing
- செயலை
- nuk'ran
- نُّكْرًا
- evil"
- மகா கொடியது
Transliteration:
Fantalaqaa hattaa izaa laqiyaa ghulaaman faqatalahoo qaala aqatalta nafsan zakiy yatam bighairi nafs; laqad ji'ta shai'an nukraa(QS. al-Kahf:74)
English Sahih International:
So they set out, until when they met a boy, he [i.e., al-Khidhr] killed him. [Moses] said, "Have you killed a pure soul for other than [having killed] a soul? You have certainly done a deplorable thing." (QS. Al-Kahf, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்திக்கவே அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா "கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை நீங்கள் கொலை செய்து விட்டீர்கள்! நிச்சயமாக நீங்கள் ஒரு தகாத காரியத்தையே செய்து விட்டீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௭௪)
Jan Trust Foundation
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே. இருவரும் சென்றனர். இறுதியாக, (வழியில்) இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தபோது (அவர்) அவனைக் கொன்றார். “ஓர் உயிரைக் கொன்ற குற்றமின்றி ஒரு பரிசுத்தமான உயிரைக் கொன்றீரா? திட்டவட்டமாக நீர் ஒரு மகா கொடிய செயலை செய்தீர்”என்று (மூஸா) கூறினார்.