குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௭௦
Qur'an Surah Al-Kahf Verse 70
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ فَاِنِ اتَّبَعْتَنِيْ فَلَا تَسْـَٔلْنِيْ عَنْ شَيْءٍ حَتّٰٓى اُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ࣖ (الكهف : ١٨)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- fa-ini ittabaʿtanī
- فَإِنِ ٱتَّبَعْتَنِى
- "Then if you follow me
- நீர் பின்தொடர்ந்தால்/என்னை
- falā tasalnī
- فَلَا تَسْـَٔلْنِى
- (do) not ask me
- கேட்காதீர்/என்னிடம்
- ʿan shayin
- عَن شَىْءٍ
- about anything
- எந்த ஒரு விஷயத்தைப் பற்றி
- ḥattā uḥ'ditha
- حَتَّىٰٓ أُحْدِثَ
- until I present
- வரை/ஆரம்பிக்கும்
- laka min'hu
- لَكَ مِنْهُ
- to you of it
- உமக்கு/அதில்
- dhik'ran
- ذِكْرًا
- a mention"
- விளக்கத்தை
Transliteration:
Qaala fa init taba'tanee falaa tas'alnee 'an shai'in hattaaa uhdisa laka minhu zikraa(QS. al-Kahf:70)
English Sahih International:
He said, "Then if you follow me, do not ask me about anything until I make to you about it mention [i.e., explanation]." (QS. Al-Kahf, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
அதற்கு அவர் "நீங்கள் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உங்களுக்கு அறிவிக்கும் வரையில் நீங்கள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்" என்று சொன்னார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௭௦)
Jan Trust Foundation
(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நீர் என்னைப் பின்தொடர்ந்தால் (நான் செய்யும்) எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் என்னிடம் கேட்காதீர் (அது குறித்த) விளக்கத்தை நான் (கூற) ஆரம்பிக்கும் வரை”என்று கூறினார்.