Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬௩

Qur'an Surah Al-Kahf Verse 63

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَرَاَيْتَ اِذْ اَوَيْنَآ اِلَى الصَّخْرَةِ فَاِنِّيْ نَسِيْتُ الْحُوْتَۖ وَمَآ اَنْسٰىنِيْهُ اِلَّا الشَّيْطٰنُ اَنْ اَذْكُرَهٗۚ وَاتَّخَذَ سَبِيْلَهٗ فِى الْبَحْرِ عَجَبًا (الكهف : ١٨)

qāla
قَالَ
He said
கூறினார்
ara-ayta
أَرَءَيْتَ
"Did you see
நீர் பார்த்தீரா?
idh awaynā
إِذْ أَوَيْنَآ
when we retired
நாம் ஒதுங்கியபோது
ilā
إِلَى
to
அருகில்
l-ṣakhrati
ٱلصَّخْرَةِ
the rock?
அந்த கற்பாறை
fa-innī
فَإِنِّى
Then indeed I
நிச்சயமாக நான்
nasītu
نَسِيتُ
[I] forgot
மறந்தேன்
l-ḥūta
ٱلْحُوتَ
the fish
மீனை
wamā ansānīhu
وَمَآ أَنسَىٰنِيهُ
And not made me forget it
மறக்கடிக்கவில்லை/எனக்கு
illā l-shayṭānu
إِلَّا ٱلشَّيْطَٰنُ
except the Shaitaan
ஷைத்தானைத் தவிர
an adhkurahu
أَنْ أَذْكُرَهُۥۚ
that I mention it
நான்கூறுவதை/அதை
wa-ittakhadha
وَٱتَّخَذَ
And it took
இன்னும் ஆக்கிக் கொண்டது
sabīlahu
سَبِيلَهُۥ
its way
தன் வழியை
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
into the sea
கடலில்
ʿajaban
عَجَبًا
amazingly"
ஆச்சரியமான

Transliteration:

Qaala ara'ayta iz awainaaa ilas sakhrati fa innee naseetul hoota wa maaa ansaaneehu illash Shaitaanu an azkurah; wattakhaza sabeelahoo fil bahri'ajabaa (QS. al-Kahf:63)

English Sahih International:

He said, "Did you see when we retired to the rock? Indeed, I forgot [there] the fish. And none made me forget it except Satan – that I should mention it. And it took its course into the sea amazingly." (QS. Al-Kahf, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) "அந்த கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டுவந்த) மீனை மறந்துவிட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தானையன்றி (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கு வழி செய்துகொண்டு (சென்று) விட்டது" என்று கூறினார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬௩)

Jan Trust Foundation

அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்த வாலிபர் மூஸாவை நோக்கி) “அந்த கற்பாறை” அருகில் நாம் ஒதுங்கி (அங்கு தங்கி)ய போது (நடந்த அதிசயத்தை) நீர் பார்த்தீரா? நிச்சயமாக நான் (அப்போது அந்த) மீனை(ப் பற்றிக் கூற) மறந்தேன். அதை நான் கூறுவதை ஷைத்தானைத் தவிர (வேறு எவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தன் வழியை ஆக்கிக் கொண்டது”என்று கூறினார்.