Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬௨

Qur'an Surah Al-Kahf Verse 62

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰىهُ اٰتِنَا غَدَاۤءَنَاۖ لَقَدْ لَقِيْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا (الكهف : ١٨)

falammā jāwazā
فَلَمَّا جَاوَزَا
Then when they had passed beyond
அவ்விருவரும் கடந்தபோது
qāla
قَالَ
he said
கூறினார்
lifatāhu
لِفَتَىٰهُ
to his boy
தன் வாலிபரை நோக்கி
ātinā
ءَاتِنَا
"Bring us
கொண்டுவா/நம்மிடம்
ghadāanā
غَدَآءَنَا
our morning meal
உணவை/நம்
laqad
لَقَدْ
Certainly
திட்டவட்டமாக
laqīnā
لَقِينَا
we have suffered
சந்தித்தோம்
min safarinā
مِن سَفَرِنَا
in our journey
பயணத்தில்/நம்
hādhā
هَٰذَا
this
இந்த
naṣaban
نَصَبًا
fatigue"
களைப்பை

Transliteration:

Falammaa jaawazaa qaala lifataahu aatinaa ghadaaa'anaa laqad laqeena min safarinaa haazaa nasabaa (QS. al-Kahf:62)

English Sahih International:

So when they had passed beyond it, [Moses] said to his boy, "Bring us our morning meal. We have certainly suffered in this, our journey, [much] fatigue." (QS. Al-Kahf, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

(தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி "நம்முடைய காலை உணவை நீங்கள் கொண்டு வாருங்கள். நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்" என்று கூறினார். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬௨)

Jan Trust Foundation

அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(தாங்கள் தேடிச் சென்ற இடத்தை அறியாது அதை) அவ்விருவரும் கடந்த போது (மூஸா) தன் வாலிபரை நோக்கி “நம் உணவை நம்மிடம் கொண்டுவா. திட்டவட்டமாக இந்த நம் பயணத்தில் களைப்பைச் சந்தித்தோம்”என்று கூறினார்.