குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬௧
Qur'an Surah Al-Kahf Verse 61
ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوْتَهُمَا فَاتَّخَذَ سَبِيْلَهٗ فِى الْبَحْرِ سَرَبًا (الكهف : ١٨)
- falammā balaghā
- فَلَمَّا بَلَغَا
- But when they reached
- அவ்விருவரும் அடைந்தபோது
- majmaʿa
- مَجْمَعَ
- the junction
- இணையும் இடத்தை
- baynihimā
- بَيْنِهِمَا
- between them
- அவ்விரண்டும்
- nasiyā
- نَسِيَا
- they forgot
- இருவரும் மறந்தனர்
- ḥūtahumā
- حُوتَهُمَا
- their fish
- தங்கள் மீனை
- fa-ittakhadha
- فَٱتَّخَذَ
- and it took
- ஆக்கிக்கொண்டது
- sabīlahu fī l-baḥri
- سَبِيلَهُۥ فِى ٱلْبَحْرِ
- its way into the sea
- தன் வழியை/கடலில்
- saraban
- سَرَبًا
- slipping away
- சுரங்கம் போல்
Transliteration:
Falammaa balaghaa majma'a bainihimaa nasiyaa hootahumaa fattakhaza sabeelahoo fil bahri sarabaa(QS. al-Kahf:61)
English Sahih International:
But when they reached the junction between them, they forgot their fish, and it took its course into the sea, slipping away. (QS. Al-Kahf, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை அடைந்தபொழுது தங்களுடைய மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (சென்று) விட்டது. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬௧)
Jan Trust Foundation
அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்விருவரும் அவ்விரண்டு (கடல்களு)ம் இணையும் இடத்தை அடைந்தபோது இருவரும் தங்கள் மீனை மறந்தனர். அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் ஆக்கிக் கொண்டது.