Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௬௦

Qur'an Surah Al-Kahf Verse 60

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قَالَ مُوْسٰى لِفَتٰىهُ لَآ اَبْرَحُ حَتّٰٓى اَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ اَوْ اَمْضِيَ حُقُبًا (الكهف : ١٨)

wa-idh qāla mūsā
وَإِذْ قَالَ مُوسَىٰ
And when said Musa
சமயம்/கூறினார்/மூஸா
lifatāhu
لِفَتَىٰهُ
to his boy
தன் வாலிபரை நோக்கி
lā abraḥu
لَآ أَبْرَحُ
"Not I will cease
சென்று கொண்டே இருப்பேன்
ḥattā
حَتَّىٰٓ
until
வரை
ablugha
أَبْلُغَ
I reach
அடைவேன்
majmaʿa
مَجْمَعَ
the junction
இணைகின்ற இடத்தை
l-baḥrayni
ٱلْبَحْرَيْنِ
(of) the two seas
இரு கடல்களும்
aw
أَوْ
or
அல்லது
amḍiya
أَمْضِىَ
I continue
நடந்து கொண்டே இருப்பேன்
ḥuquban
حُقُبًا
(for) a long period"
நீண்டதொரு காலம்

Transliteration:

Wa iz qaalaa Moosaa lifataahu laaa abrahu hattaaa ablugha majma'al bahrayni aw amdiya huqubaa (QS. al-Kahf:60)

English Sahih International:

And [mention] when Moses said to his boy [i.e., servant], "I will not cease [traveling] until I reach the junction of the two seas or continue for a long period." (QS. Al-Kahf, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி "இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை நான் அடையும் வரையில் செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்" என்று கூறியதை (நபியே! அவர் களுக்கு) நீங்கள் ஞாபகமூட்டுங்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௬௦)

Jan Trust Foundation

இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸா தன்(னுடன் இருந்த) வாலிபரை நோக்கி “இரு கடல்களும் இணைகின்ற இடத்தை நான் அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது நீண்டதொரு காலம் நடந்துகொண்டே இருப்பேன்”என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!