Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௭

Qur'an Surah Al-Kahf Verse 57

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ فَاَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُۗ اِنَّا جَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًاۗ وَاِنْ تَدْعُهُمْ اِلَى الْهُدٰى فَلَنْ يَّهْتَدُوْٓا اِذًا اَبَدًا (الكهف : ١٨)

waman
وَمَنْ
And who
யார்?
aẓlamu
أَظْلَمُ
(is) more wrong
மகா தீயவன்
mimman dhukkira
مِمَّن ذُكِّرَ
than (he) who is reminded
எவனைவிட/அறிவுரை கூறப்பட்டான்
biāyāti
بِـَٔايَٰتِ
of the Verses
வசனங்களைக் கொண்டு
rabbihi
رَبِّهِۦ
(of) his Lord
தன் இறைவனின்
fa-aʿraḍa
فَأَعْرَضَ
but turns away
புறக்கணித்தான்
ʿanhā
عَنْهَا
from them
அவற்றை
wanasiya
وَنَسِىَ
and forgets
இன்னும் மறந்தான்
mā qaddamat
مَا قَدَّمَتْ
what have sent forth
எவற்றை/முற்படுத்தின
yadāhu
يَدَاهُۚ
his hands?
தன் இரு கரங்கள்
innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
jaʿalnā
جَعَلْنَا
[We] have placed
ஆக்கினோம்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
over their hearts
அவர்களின் உள்ளங்கள் மீது
akinnatan
أَكِنَّةً
coverings
தடுக்கும் மூடிகளை
an yafqahūhu
أَن يَفْقَهُوهُ
lest they understand it
அவர்கள் புரிவதை/அதை
wafī ādhānihim
وَفِىٓ ءَاذَانِهِمْ
and in their ears
இன்னும் அவர்களுடைய காதுகள் மீது
waqran
وَقْرًاۖ
(is) deafness
கனத்தை
wa-in tadʿuhum
وَإِن تَدْعُهُمْ
And if you call them
அழைத்தால்/நீர் அவர்களை
ilā l-hudā
إِلَى ٱلْهُدَىٰ
to the guidance
நேர்வழிக்கு
falan yahtadū
فَلَن يَهْتَدُوٓا۟
then never they will be guided
நேர்வழி பெறவே மாட்டார்கள்
idhan abadan
إِذًا أَبَدًا
then ever
அப்போது/ஒருபோதும்

Transliteration:

Wa man azlamu mimman zukkira bi ayaati Rabbihee fa-a'rada 'anhaa wa nasiya maa qaddamat yadaah; innaa ja'alnaa 'alaa quloobihim akinnatan any yafqahoohu wa feee aazaanihim waqraa; wa in tad'uhum ilal hudaa falany yahtadooo izan abadaa (QS. al-Kahf:57)

English Sahih International:

And who is more unjust than one who is reminded of the verses of his Lord but turns away from them and forgets what his hands have put forth? Indeed, We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And if you invite them to guidance – they will never be guided, then – ever. (QS. Al-Kahf, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகின்றானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) யாதொன்றையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீங்கள் அவர்களை நேரான வழியில் (எவ்வளவு வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫௭)

Jan Trust Foundation

எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தன் இறைவனின் வசனங்களைக் கொண்டு தனக்கு அறிவுரை கூறப்பட அவற்றைப் புறக்கணித்து, தன் இரு கரங்களும் முற்படுத்திய(கெட்ட)வற்றை மறந்தவனை விட மகா தீயவன் யார்? அ(ந்த சத்தியத்)தை அவர்கள் புரிவதை தடுக்கும் மூடிகளை அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களுடைய காதுகள் மீது கனத்தையும் (மந்தத்தையும்) ஆக்கினோம். நீர் அவர்களை நேர் வழிக்கு அழைத்தாலும் அப்போது அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறவேமாட்டார்கள்.