Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௨

Qur'an Surah Al-Kahf Verse 52

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ يَقُوْلُ نَادُوْا شُرَكَاۤءِيَ الَّذِيْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُمْ مَّوْبِقًا (الكهف : ١٨)

wayawma
وَيَوْمَ
And the Day
நாளை
yaqūlu
يَقُولُ
He will say
கூறுவான்
nādū
نَادُوا۟
"Call
அழையுங்கள்
shurakāiya
شُرَكَآءِىَ
My partners
என் இணைகளை
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
zaʿamtum
زَعَمْتُمْ
you claimed"
பிதற்றினீர்கள்
fadaʿawhum
فَدَعَوْهُمْ
then they will call them
அவற்றை அவர்கள் அழைப்பார்கள்
falam yastajībū
فَلَمْ يَسْتَجِيبُوا۟
but not they will respond
பதிலளிக்கமாட்டாது
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
wajaʿalnā
وَجَعَلْنَا
And We will make
இன்னும் ஆக்குவோம்
baynahum
بَيْنَهُم
between them
அவர்களுக்கு மத்தியில்
mawbiqan
مَّوْبِقًا
a barrier
ஓர் அழிவிடத்தை

Transliteration:

Wa Yawma yaqoolu naadoo shurakaaa'i yal lazeena za'amtum fada'awhum falam yastajeeboo lahum wa ja'alnaa bainahum maw biqaa (QS. al-Kahf:52)

English Sahih International:

And [warn of] the Day when He will say, "Call My 'partners' whom you claimed," and they will invoke them, but they will not respond to them. And We will put between them [a valley of] destruction. (QS. Al-Kahf, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

(இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) "நீங்கள் எனக்குத் துணையானவை என எவைகளை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவைகளை நீங்கள் அழையுங்கள்" என்று கூறும் ஒரு நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபக மூட்டுங்கள். அவர்கள் அவைகளை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. அன்றி, நாம் (அவை களுக்கும்) அவர்களுக்கும் இடையில் சந்திக்க முடியாத ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம். (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫௨)

Jan Trust Foundation

“எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் நீங்கள் பிதற்றிய என் இணைகளை (உங்கள் உதவிக்கு) அழையுங்கள் என அவன் கூறும் நாளை (நினைவு கூருங்கள்). அவர்கள் அவற்றை அழைப்பார்கள். (ஆனால்) அவை அவர்களுக்கு பதிலளிக்க மாட்டாது. அவர்களுக்கு மத்தியில் ஓர் அழிவிடத்தை ஆக்குவோம்.