Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௧

Qur'an Surah Al-Kahf Verse 51

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ مَآ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْۖ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا (الكهف : ١٨)

mā ashhadttuhum
مَّآ أَشْهَدتُّهُمْ
Not I made them witness
நான் ஆஜராக்கவில்லை/அவர்களை
khalqa
خَلْقَ
the creation
படைத்ததிலும்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களை
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமி
walā khalqa
وَلَا خَلْقَ
and not the creation
இன்னும் படைத்ததிலும்
anfusihim
أَنفُسِهِمْ
(of) themselves
அவர்களையே
wamā kuntu
وَمَا كُنتُ
and not I Am
இன்னும் நான் இருக்கவில்லை
muttakhidha
مُتَّخِذَ
the One to take
எடுத்துக் கொள்பவனாக
l-muḍilīna
ٱلْمُضِلِّينَ
the misleaders
வழிகெடுப்பவர்களை
ʿaḍudan
عَضُدًا
(as) helper(s)
உதவியாளர்களாக

Transliteration:

Maaa ash hattuhum khalqas samaawaati wal ardi wa laa khalqa anfusihim wa maa kuntu muttakizal mudilleena 'adudaa (QS. al-Kahf:51)

English Sahih International:

I did not make them witness to the creation of the heavens and the earth or to the creation of themselves, and I would not have taken the misguiders as assistants. (QS. Al-Kahf, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுது அவர்களை (உதவியாக) அழைக்கவில்லை. அன்றி, அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் (அவர்களில் சிலரை படைக்க சிலரை உதவியாக) நாம் அவர்களை அழைக்கவில்லை. வழி கெடுக்கும் இந்த ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம்முடைய சகாக்களாக ஆக்கிக் கொள்ளவில்லை. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫௧)

Jan Trust Foundation

வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள் இன்னும் பூமியை படைத்ததிலும் (ஏன்) அவர்களையே படைத்ததிலும் அவர்களை நான் (என் உதவிக்கு) ஆஜராக்கவில்லை. வழிகெடுப்பவர்களை உதவியாளர்களாக எடுத்துக் கொள்பவனாக நான் இருக்கவில்லை.