Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௫௦

Qur'an Surah Al-Kahf Verse 50

ஸூரத்துல் கஹ்ஃபு [௧௮]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖۗ اَفَتَتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗٓ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِيْ وَهُمْ لَكُمْ عَدُوٌّۗ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا (الكهف : ١٨)

wa-idh qul'nā
وَإِذْ قُلْنَا
And when We said
நாம் கூறிய சமயம்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
to the Angels
வானவர்களுக்கு
us'judū
ٱسْجُدُوا۟
"Prostrate
சிரம் பணியுங்கள்
liādama
لِءَادَمَ
to Adam"
ஆதமுக்கு
fasajadū
فَسَجَدُوٓا۟
so they prostrated
ஆகவே சிரம் பணிந்தனர்
illā
إِلَّآ
except
தவிர
ib'līsa
إِبْلِيسَ
Iblis
இப்லீஸ்
kāna
كَانَ
(He) was
இருந்தான்
mina l-jini
مِنَ ٱلْجِنِّ
of the jinn
ஜின்களில் ஒருவனாக
fafasaqa
فَفَسَقَ
and he rebelled
மீறினான்
ʿan amri
عَنْ أَمْرِ
against the Command
கட்டளையை
rabbihi
رَبِّهِۦٓۗ
(of) his Lord
தன் இறைவனின்
afatattakhidhūnahu
أَفَتَتَّخِذُونَهُۥ
Will you then take him
எடுத்துக் கொள்கிறீர்களா?/அவனை
wadhurriyyatahu
وَذُرِّيَّتَهُۥٓ
and his offspring
இன்னும் அவனது சந்ததியை
awliyāa
أَوْلِيَآءَ
(as) protectors
நண்பர்களாக
min dūnī
مِن دُونِى
other than Me other than Me
என்னையன்றி
wahum
وَهُمْ
while they
அவர்களோ
lakum
لَكُمْ
(are) to you
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّۢۚ
enemies?
எதிரிகள்
bi'sa
بِئْسَ
Wretched
மிக கெட்டவன்
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
for the wrongdoers
தீயவர்களுக்கு
badalan
بَدَلًا
(is) the exchange
மாற்றம்

Transliteration:

Wa iz qulnaa lilma laaa'ikatis judoo li Aadama fasajadooo illaaa Ibleesa kaana minal jinni fafasaqa 'an amri Rabbih; afatattakhizoonahoo wa zurriyatahooo awliyaaa'a min doonee wa hum lakum 'aduww; bi'sa lizzaalimeena badalaa (QS. al-Kahf:50)

English Sahih International:

And [mention] when We said to the angels, "Prostrate to Adam," and they prostrated, except for Iblees. He was of the jinn and departed from [i.e., disobeyed] the command of his Lord. Then will you take him and his descendants as allies other than Me while they are enemies to you? Wretched it is for the wrongdoers as an exchange. (QS. Al-Kahf, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

மலக்குகளை நோக்கி "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே (மனிதர்களே!) நீங்கள் என்னையன்றி அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது. (ஸூரத்துல் கஹ்ஃபு, வசனம் ௫௦)

Jan Trust Foundation

அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறியசமயத்தை நினைவு கூருவீராக! ஆகவே (அவர்கள்) சிரம் பணிந்தனர் இப்லீசைத் தவிர. அவன் ஜின்களில் ஒருவனாக இருந்தான். தன் இறைவனின் கட்டளையை மீறினான். அவனையும் அவனது சந்ததியையும் என்னையன்றி (உங்கள்) நண்பர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்களோ உங்களுக்கு எதிரிகள். (அல்லாஹ்வின் நட்பை விட்டுவிட்டு ஷைத்தானை நண்பனாக மாற்றிய அந்த) தீயவர்களுக்கு அவன் மிக கெட்ட மாற்றமாவான்.